உறவுகளின் பசியையும், ஆன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்ய தன் ஆசைகளை புதைத்துவிட்டு அயல்நாடு சென்றான் நண்பனொருவன்.
என்றாவது ஒரு நாள் இந்த மண்ணில் கம்பீரமாய் வந்திறங்குவான் என்றெண்ணி காத்திருந்தோம்
வந்தவன் காலை மண்ணில் பதிக்கவில்லை மாறாக அவனையே மண்ணில் புதைக்க நேரிட்டது...
ஆசைகளை இழந்து சம்பாரிக்க சென்றவன் இன்று தன் உயிரையும் இழந்து உயிரற்ற உடலாய் வந்து சேர்ந்தான்.
"காரணம் பணம்"..
இன்னும் எத்துனை உயிர்களை காவு வாங்கவிருக்கிறதோ இந்த பணம்...!
No comments:
Post a Comment