Friday, 27 June 2014

"அம்மா"

நண்பர்களுக்கு வணக்கம் 
இது வரை புதுக்கவிதை எழுதி வந்த நான் முதன்முதலாக மரபுக்கவிதை எழுத முயற்ச்சி செய்துள்ளேன்... 

அதுவும் முதல் எப்போதும் முழுமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் முதல் வார்த்தையாய் என்றும் விளங்கும் ''அம்மா" எனும் தாரக மந்திரத்தை வைத்து ஆரம்பம் செய்கிறேன்.......!

இதை எனது முதலும் முற்றுமாக விளங்கும் என் அம்மாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் ......!!!!

உங்கள் ஆதரவுக்கு நன்றி

கெளதம் இளங்கோ...


"அம்மா"

வன்முறையாய்...
வலி கொடுத்துப்...
பிறந்த உனக்கு...
முதல் பார்வை...
முத்தம் செதுக்கியவள்...
அம்மா!!!

உதிரமுதம் ஊட்டி...
உயிராய் உனை மாற்றி...
அகிம்சை அராஜகத்தில்...
அகமகிழ்ந்தவள்...
அம்மா!!!

ஆசைகள் யாவையும்...
நீ என நினைத்து...
நித்தம் ஓர் நிதர்சனம்...
உருவாக்கினாள்...
அம்மா!!!

வலிகளுக்குள் எரிந்தாலும்...
சூரியனாய் ஒளி கொடுத்து...
உன்னை பூமிக்கு...
உயிர் தந்தாள்...
அம்மா!!!

முதல் ஆசான் அவளாக...
முழு நேர மதியாக...
உனை தாங்கும் கருவாக...
நிலைகொண்டாள்...
அம்மா!!!

வெறுத்தாலும் விருப்போடு...
உனை தாக்கும் காற்றோடு...
போராட்டம் நடத்துகின்ற...
பூந்தோட்ட பூகம்பம்...
அம்மா!!!

No comments:

Post a Comment