அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களோடு
கெளதம் இளங்கோ
எவைகள் நம்மை காயப்படுத்துகின்றனவோ
அவையே நமக்கு கற்றுக்கொடுக்கின்றன
ஏழுமுறை விழுங்கள், கவலை இல்லை
எட்டாம் முறை எழுங்கள் இனி துயரம் இல்லை
ஏனெனில்
வேர்வையில் முழ்கி மனிதன் இறப்பதில்லை
முயற்சியால் மனிதனுக்கு
என்றுமே தோல்வியில்லை
இயற்கை நமக்கு எத்தனை பாடங்களைத்தான்
சொல்லித்தருகிறது
முட்டை வெளியில் இருந்து உடைக்கப்படும்போது
ஒரு உயிர் பலியாகிறது - ஆனால்
அதே முட்டை உள்ளிருந்து உடைந்தால் ஒரு உயிர்
பிறக்கிறது - ஆக
செயற்கரிய செயல்கள் அனைத்தும்
நம் உள்ளிருந்தே பிறக்கிறது - எனவே
மனதை தூய்மை படுத்துவோம்
நம் குறைகளை பிறர் மன்னிக்கும் அளவிற்கு
நம்மை பிறர் நேசிக்கட்டும்.
நம் உணவை நாம் முடிக்கும் வரை பிறர்
நமக்காக காத்திருக்கட்டும்
நாம் விரும்பும் நிகழ்ச்சிகளை காணும் வரை
டிவி விளம்பரங்கள் குறைந்தே வரட்டும்
நம் செக் புக்கின் சில பக்கங்கள்
தர்மத்திற்காக ஒதுக்கப்படட்டும்
அப்துல் கலாமின் ஆசைப்படி
ஆகாயத்தில் கோட்டை கட்டலாம்
அந்த உழைப்பு வீணாக போக வேண்டியது இல்லை
அங்கேயே அந்த கோட்டை இருக்கட்டும்
இந்த வருடம் முதல் அதற்கு சரியான
அடித்தளம் இடுவோம்
நம்மை முன்னோடியாக கருதும்
நல்லவர்களின்
கனவை மெய்பிப்போம்
குறை சொல்லும் மனப்பாங்கை அழிப்போம்
கூடியவரை குடும்பத்துடன் இருப்போம்
அடுத்தவரின் குற்றம் பொறுப்போம்
அவரின் நற்குணங்கள் ஏற்போம்
' கட்டிப்பிடி வைத்தியம்' செய்வோம்
நட்பு எனும் பூவை பேணிக்காப்போம்
துன்பத்தை இனியும் நினையோம்
செல்போன் மோகத்தை குறைப்போம்
சிட்டுக்குருவியை மீண்டும் பார்ப்போம்
புன்னகையால் மனதை திறப்போம்
புதியதை வரவேற்போம்
முதியோர் இல்லத்திற்கு ஓய்வு கொடுப்போம்
விதிகளை உடைப்போம்
விரைவாக மன்னிப்போம்
உண்மையாக விரும்புவோம்
ஊழலில்லா உலகம் காண்போம்
அளவில்லாமல் சிரிப்போம்
அண்டங்களை ஆளுவோம்
புத்தாண்டே வருக
புதுபொலிவை தருக
கெளதம் இளங்கோ
எவைகள் நம்மை காயப்படுத்துகின்றனவோ
அவையே நமக்கு கற்றுக்கொடுக்கின்றன
ஏழுமுறை விழுங்கள், கவலை இல்லை
எட்டாம் முறை எழுங்கள் இனி துயரம் இல்லை
ஏனெனில்
வேர்வையில் முழ்கி மனிதன் இறப்பதில்லை
முயற்சியால் மனிதனுக்கு
என்றுமே தோல்வியில்லை
இயற்கை நமக்கு எத்தனை பாடங்களைத்தான்
சொல்லித்தருகிறது
முட்டை வெளியில் இருந்து உடைக்கப்படும்போது
ஒரு உயிர் பலியாகிறது - ஆனால்
அதே முட்டை உள்ளிருந்து உடைந்தால் ஒரு உயிர்
பிறக்கிறது - ஆக
செயற்கரிய செயல்கள் அனைத்தும்
நம் உள்ளிருந்தே பிறக்கிறது - எனவே
மனதை தூய்மை படுத்துவோம்
நம் குறைகளை பிறர் மன்னிக்கும் அளவிற்கு
நம்மை பிறர் நேசிக்கட்டும்.
நம் உணவை நாம் முடிக்கும் வரை பிறர்
நமக்காக காத்திருக்கட்டும்
நாம் விரும்பும் நிகழ்ச்சிகளை காணும் வரை
டிவி விளம்பரங்கள் குறைந்தே வரட்டும்
நம் செக் புக்கின் சில பக்கங்கள்
தர்மத்திற்காக ஒதுக்கப்படட்டும்
அப்துல் கலாமின் ஆசைப்படி
ஆகாயத்தில் கோட்டை கட்டலாம்
அந்த உழைப்பு வீணாக போக வேண்டியது இல்லை
அங்கேயே அந்த கோட்டை இருக்கட்டும்
இந்த வருடம் முதல் அதற்கு சரியான
அடித்தளம் இடுவோம்
நம்மை முன்னோடியாக கருதும்
நல்லவர்களின்
கனவை மெய்பிப்போம்
குறை சொல்லும் மனப்பாங்கை அழிப்போம்
கூடியவரை குடும்பத்துடன் இருப்போம்
அடுத்தவரின் குற்றம் பொறுப்போம்
அவரின் நற்குணங்கள் ஏற்போம்
' கட்டிப்பிடி வைத்தியம்' செய்வோம்
நட்பு எனும் பூவை பேணிக்காப்போம்
துன்பத்தை இனியும் நினையோம்
செல்போன் மோகத்தை குறைப்போம்
சிட்டுக்குருவியை மீண்டும் பார்ப்போம்
புன்னகையால் மனதை திறப்போம்
புதியதை வரவேற்போம்
முதியோர் இல்லத்திற்கு ஓய்வு கொடுப்போம்
விதிகளை உடைப்போம்
விரைவாக மன்னிப்போம்
உண்மையாக விரும்புவோம்
ஊழலில்லா உலகம் காண்போம்
அளவில்லாமல் சிரிப்போம்
அண்டங்களை ஆளுவோம்
புத்தாண்டே வருக
புதுபொலிவை தருக
No comments:
Post a Comment