Friday, 27 June 2014

சுனாமி

நினைவிருக்கிறதா இந்த நாள் 26 டிசம்பர் 2004
ஆழிபேரலை அகிலத்தை அள்ளிச்சென்ற அந்த கருப்பு தினம்

9 ஆண்டுகள் கடந்துவிட்டது ஆனால் இன்னும் அந்த அலைகளின் அணிவகுப்பும் மரண ஓலங்களும் மனித பிண்டங்களும் கண்ணை விட்டு நீங்க மறுக்கின்றன..



அலைகடலே
உன் கரையில் விளையாடியது குற்றமென
பிஞ்சுகளின்
உயிரோடு விளையாடிவிட்டாய்.

உன் மடியில்
வலை வீசியது குற்றமென
மீனவர்களின்
உயிரை விலை பேசிவிட்டாய் .

குழந்தைகளை பிரித்து
பெற்றோர்களை அனாதயாக்கினாய்
பெற்றோரை பிரித்து
குழந்தைகளை அனாதயாக்கினாய்.

இன்னும்
யாரை பிரிக்க
அலை அலையாய்
அலைந்துகொண்டு இருக்கிறாய்?

இங்கு இறப்பதற்கு
இன்னும் தான் மிச்சமிருக்கிறோம்
இன்னுயிர் நீத்த அனைவருக்கும் அழுக
கண்ணீர் தான் இருப்பில்லை…

No comments:

Post a Comment