மழை...
வருணபகவானின்
வரப் பிரசாதம் என்கிறது
புராணம்...
அன்று...
பெய்யெனப்
பெய்த மழை....
மாதம் மும்மாரிப்
பெய்த மழை.....
இன்று!
முறைமாறிப்
பெய்கிறது...
நீர்...
ஆவியாகி
மேலெழும்பி
மேகங்களில் பட்டு
நீராகி வீழ்வதே
மழையென்கிறது
விஞ்ஞானம்...
பெய்யும் மழை
ஒன்றே எனினும்
விளித்திடும் பெயர்கள்
வெவ்வேறாகும்...
மழைத்துளியே ‘ஆலி’யாம்...
விடாது பெய்யும்
மழை ‘சோனை’யாம்…
சிறிய மழை
‘தூறலாம்’…
மலையில் பட்டுச் சிதறி
விழுவதே ‘சாரலாம்’…
அடைத்த கதவு திறக்காதிருக்க
பெய்யும் மழை ‘அடைமழையாம்’…
பெருந்துளியோடு பெய்வது
‘கனமழையாம்’...
பனிக்கட்டிகளோடு பெய்வது
‘ஆலங்கட்டி மழையாம்’…
மலைச்சிகரங்களில் பெய்வது
‘பனிமழையாம்’…
கடலில் பெய்யும் மழை
‘ஆழிமழையாம்’...
அந்திப் பொழுதில்
பெய்யும் மழை
‘அந்திமழையாம்’…
சில்வர் அயோடைடு கொண்டு
பெய்ய வைக்கும் மழை
‘செயற்கை’ மழையாம்...
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சொந்தம் ஏற்படுத்திய
வினோத குழந்தையல்லவா
இந்த மழை
கவிதைக்காக காத்திருக்கும்
காலமெல்லாம் கன
நேரத்தில் தளிர்த்து நின்றாய்...
என் காகிதத்தில் முளைத்து நின்றாய்..
கவிஞன் ஆகி போகிறேன்
உன்னை பார்த்த மாத்திரத்தில்....
வருணபகவானின்
வரப் பிரசாதம் என்கிறது
புராணம்...
அன்று...
பெய்யெனப்
பெய்த மழை....
மாதம் மும்மாரிப்
பெய்த மழை.....
இன்று!
முறைமாறிப்
பெய்கிறது...
நீர்...
ஆவியாகி
மேலெழும்பி
மேகங்களில் பட்டு
நீராகி வீழ்வதே
மழையென்கிறது
விஞ்ஞானம்...
பெய்யும் மழை
ஒன்றே எனினும்
விளித்திடும் பெயர்கள்
வெவ்வேறாகும்...
மழைத்துளியே ‘ஆலி’யாம்...
விடாது பெய்யும்
மழை ‘சோனை’யாம்…
சிறிய மழை
‘தூறலாம்’…
மலையில் பட்டுச் சிதறி
விழுவதே ‘சாரலாம்’…
அடைத்த கதவு திறக்காதிருக்க
பெய்யும் மழை ‘அடைமழையாம்’…
பெருந்துளியோடு பெய்வது
‘கனமழையாம்’...
பனிக்கட்டிகளோடு பெய்வது
‘ஆலங்கட்டி மழையாம்’…
மலைச்சிகரங்களில் பெய்வது
‘பனிமழையாம்’…
கடலில் பெய்யும் மழை
‘ஆழிமழையாம்’...
அந்திப் பொழுதில்
பெய்யும் மழை
‘அந்திமழையாம்’…
சில்வர் அயோடைடு கொண்டு
பெய்ய வைக்கும் மழை
‘செயற்கை’ மழையாம்...
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சொந்தம் ஏற்படுத்திய
வினோத குழந்தையல்லவா
இந்த மழை
கவிதைக்காக காத்திருக்கும்
காலமெல்லாம் கன
நேரத்தில் தளிர்த்து நின்றாய்...
என் காகிதத்தில் முளைத்து நின்றாய்..
கவிஞன் ஆகி போகிறேன்
உன்னை பார்த்த மாத்திரத்தில்....
No comments:
Post a Comment