Wednesday, 15 August 2018

ஏன் சுதந்திர இந்தியாவை புறக்கணிக்கிறோம்..??


2009க்கு முன்பு,
நானும் உங்களைப்போலவே, உங்களைவிட அதிகமாகவே, இந்திய குடியரசு தினத்தை, இந்திய சுதந்திர தினத்தை பெருமையாக கொண்டாடியவன் தான், இந்திய நாட்டுக் கொடியை சட்டையில் குத்திக் கொண்டவன் தான், தெருத்தெருவாக தேடிப்போய், அன்று குடியரசு தினம், சுதந்திர தினம் என்பதே தெரியாத பாமரர்களுக்கு கொடி கொடுத்தவன் தான், குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்தவன் தான்.....

2009க்கு முன்பு,
இந்தியா என் நாடு, இது என் குடியரசு தினம், இது என் சுதந்திர தினம் என்று கொண்டாடிய போதெல்லாம், எனக்கு இந்தியாவின் மத்திய ஆட்சி மீது எந்தவொரு கோபமும் இல்லை, வெறுப்பும் இல்லை, குறைகள்இல்லை என்று நினைத்து விடாதீர்கள். அப்போதும் இருந்தது.....
எங்கள் தாய்மொழிக்கு கொடுக்க வேண்டிய நியாயமான அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்காத கோபம் இருந்தது...
எங்கள் தாய்மண்ணில் நீங்கள் உங்கள் மொழியை திணிப்பதில் கோபம் இருந்தது...
எங்கள் மாநிலத்தின், தமிழ்நாட்டின் தொழில்துறையை நீங்கள் பல சட்டங்கள் போட்டு முடக்கியதில் கோபம் இருந்தது....
எங்கள் கச்சத்தீவை - உங்கள் நட்பு நாட்டுக்கு தாரைவார்த்த கோபம் இருந்தது....
எங்களுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய காவேரி நதிநீரை, ஆராய்ச்சி குழு, விசாரணை குழு, விசாரணை ஆணையம், நீதிமன்றம் என்று போட்டு இழுத்தடித்ததில் கோபம் இருந்தது....
எங்கள் தமிழ்நாட்டு மீனவர்களை, உங்கள் நட்பு நாடு சுட்டுக் கொல்வதை தட்டிக் கேட்காததில் கோபம் இருந்தது....
எங்கள் தமிழ்நாட்டில் நீங்கள் வசூலிக்கும் வரிகளில், எங்களுக்கு நியாயமான பங்கு கொடுக்காமல், உங்களுக்குப் பிடித்த மாநிலங்களுக்கு வாரி வழங்கியதில் கோபம் இருந்தது.....
இப்படி சொல்லிக்கொண்டே போனால், இதுபோன்ற ஆயிரம் கோபங்களையும் அதற்கான காரணங்களையும் என்னால் அடுக்கிக்கொண்டே போகமுடியும்....
ஆனாலும், அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு, இந்தியா எங்கள் நாடு, இது எங்கள் குடியரசு தினம், இது எங்கள் சுதந்திர தினம் என்று தான் இருந்தேன்.....
அது என்ன 2009 மட்டும் அப்படியொரு மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டது என்று நீங்கள் கேட்கலாம்.... ஆமாம், தமிழீழ இனப்படுகொலை தான் எனக்குள் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியது...
இந்தியா எனக்கான நாடு இல்லை, இந்தியா எங்கள் உணர்வுகளை மதிக்காது, இந்தியாவுக்கு நாங்கள் முக்கியம் இல்லை என்ற உண்மையை, நடுமண்டையில் ஆணி அடித்து உணர்த்திய தருணம் அதுதான்....
உங்கள் நட்பு நாடு, உள்நாட்டுப் போரில் சிதறிவிடக் கூடாது என்று நீங்கள்,
இராணுவ ஆலோசனைகள் வழங்கியதில் எனக்கு கோபம் இல்லை,
இராணுவப் பயிற்சி வழங்கியதில் எனக்கு கோபம் இல்லை,
இராணுவ தளவாடங்களை வழங்கியதில் கோபம் இல்லை,
இராணுவ வீரர்களை அனுப்பியதிலும் எனக்கு கோபம் இல்லை. அது ஏன், ஒட்டுமொத்த இந்திய இராணுவத்தை அனுப்பி இருந்தாலும் கோபம் வந்திருக்கப் போவதில்லை.....
என்னுடைய கோபம் எல்லாம்,
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடக்கும்போது, இலங்கை அரசின் இராணுவம் பொதுமக்களின் வசிப்பிடங்களை குண்டு வீசி தாக்கும்போது, போர் நடக்கும் இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறிய பொதுமக்கள் மீது குண்டுகள் வீசிய தாக்கிய போது, அதைத் தடுப்பதற்கு நீங்கள் எதாவது நடவடிக்கைகள் எடுத்தீர்களா? ஐக்கிய நாடுகள் சபையில் கவனீர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தீர்களா? அண்டை நாடுகளுடன், சர்வதேச நாடுகளுடன் பேசி, பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகள் செய்தீர்களா? .... அங்கே கொல்லப்படுபவர்கள் , உங்கள் நாட்டில் வசிக்கும் இனங்கள் ஒன்றின் உறவுகள் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?
தமிழ்நாட்டில் நாங்கள் போராடியது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, நாங்கள் கதறியதாவது உங்கள் காதில் கேட்டதா? .........
பாக்கிஸ்தானில் பஞ்சாபிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு பஞ்சாப் என்ற மாநிலம் இந்தியாவில் இருக்குமா?
நேப்பாளில் மதேசிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு உத்தரபிரதேசம், பிகார் என்ற மாநிலங்கள் இந்தியாவில் இருக்குமா?
பங்களாதேசில் வங்காளிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு மேற்கு வங்காளம் என்ற மாநிலம் இந்தியாவில் இருக்குமா?
சொல்லுங்கள்....
நீங்களே சொல்லுங்கள்....
இந்தியா - இந்தியன் என்ற உணர்வில் இருந்து என்னை அன்னியப்படுத்தியது இந்தியா அரசு தான்
தவறு இந்தியாவின் மேல் தான்....
இது என்னுடைய தவறு இல்லை...
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை....
1. இந்தியா என்ற கூட்டமைப்பு நாட்டின் முதல் செம்மொழியும், மிகப் பழமையான மொழியுமான தமிழை, இந்திய கூட்டமைப்பு நாட்டின் அலுவல் மொழியாக அறிவியுங்கள்...
2. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழிச் சட்டத்திற்கு புறம்பாக, உங்கள் இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிப்பதை நிறுத்துங்கள்.
3. தமிழ்நாடு மாநிலத்தின் தொழில்துறைகளை, இயற்கை வளங்களை நிர்வகிக்கும் உரிமைகளை தமிழ்நாட்டு அரசுக்கு கொடுங்கள். அணுவுலை வேண்டுமா, ஆயுத உலை வேண்டுமா, எரிவாயு வேண்டுமா, எரிந்து சாக வேண்டுமா என்பதை தமிழ்நாட்டு மக்களே தீர்மானிக்கட்டும்....
4. தமிழ்நாடு சட்டமன்றத்தின் - அரசின் அனுமதி இல்லாமல் இலங்கைக்கு நீங்கள் கொடுத்த கச்சத்தீவை, உங்கள் நட்பு நாட்டிடம் இருந்து திரும்பி வாங்குங்கள். உங்களால் முடியவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர, பாராளுமன்ற அனுமதி வழங்குங்கள்.
5. காவேரி நடுவர் மன்றத் தீர்பின்படி, இந்திய அரசின் அரசாணைப்படி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உடனடியாக #காவேரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்.... முடியவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர, பாராளுமன்ற ஒப்புதல் வழங்குங்கள்.
6. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை உங்கள் நட்பு நாட்டிடம் அன்பாக சொல்லுங்கள். கேட்கா விட்டால், சர்வதேச கடல்சார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். முடியா விட்டால், தமிழ்நாடு அரசு சர்வதேச கடல்சார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று பாராளுமன்ற ஒப்புதல் வழங்குங்கள்....
7. எங்களிடம் இருந்து வசூலிக்கும் வரியில், கூ்டமைப்பு நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதற்கு தேவையான மொத்தச் செலவை, தமிழ்நாடு மக்கள்தொகை விகிதாச்சாரப்படி, அல்லது நிலப்பரப்பு விகிதாச்சாரப்படி எடுத்துக்கொண்டு மீதத்தொகையை திருப்பிக் கொடுங்கள்...
இன்னும் நிறைய இருக்கு... முதல்கட்டமாக இவற்றையாவது செய்யுங்கள்....
செய்தீர்கள் என்றால், எனக்கும்,
இந்தியா என் நாடு தான்,
இது என் குடியரசு தினம் தான்,
இது என் சுதந்திர தினம் தான் என்ற உணர்வு மீண்டும் வரும்... கொண்டாட தோன்றும்...
இல்லையென்றால், பிரிட்டிஷ் இந்தியா என்ற நாட்டுக்கும், இந்திய குடியரசு என்ற நாட்டுக்கும் எனக்குள் ஒரு வேறுபாடும் இல்லை....
நேற்று,
பாக்கிஸ்தான் நாட்டின் சுதந்திரதினத்திற்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கும்,
இன்று,
இந்தியா நாட்டின் சுதந்திரதினத்திற்கு வாழ்த்துகள் சொல்வதிலும்
ஒரு வேறுபாடும் கிடையாது

இப்படிக்கு 
Anti -Indians  , பொறுக்கிகள், தேசத்துரோகிகள்,தீவிரவாதிகள்,சமூகவிரோதிகள்..

Tuesday, 22 May 2018

தமிழ்தேசிய தமிழ்’நாடு’ என்பது யாது..?!

ஈழம் என்பது எங்கோ கண்ணுக்கெட்டாத தூரத்தில் மிதந்து கொண்டிருக்கிற தீவு என்கிற எண்ணப்பாட்டிலிருந்து அதுவும் தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியே என்கிற நிலைப்பாட்டை தமிழ்நாட்டு தமிழர்கள் எடுத்திருப்பது உற்றுநோக்கப்படவேண்டியது...!!

இந்தியாவில் இருக்கிற எல்லா தேசிய இனங்களையும் விட சுயநிர்ணய உரிமை கோரக்கூடிய சாத்தியக்கூறுகளை அதிகம் பெற்றிருப்பது தமிழ்த்தேசிய இனம் மட்டும்தான்...!!

தமிழ்த்தேசியம் என்ற நெருப்பை தொடர்ந்து இந்தியம் எரியூட்டிக்கொண்டே இருந்தாலும் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கோருவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது .

 ஏனென்றால் சுதந்திரத்திற்கு பிறகு வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்டிருக்கிற "இந்திய கருத்தியல்" ஏதாவது ஒரு தேசிய இனம் எழுச்சி பெற்றாலும் உடைந்து சுக்குநூறாகிவிடும்.

எல்லா தேசிய இனங்களுமே தனித்த சிறப்புகளை கொண்டிருந்தாலும் இந்தியாவை தவிர வேறு நாடுகளிலும் வாழ்கிற அதுவும் பொருளாதார,அரசியல் வலிமையோடு பரவி வாழ்கிற ஒரே தேசிய இன மக்கள் தமிழர்கள்...

ஒரு நாடாக தனித்தியங்கத்தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யக்கூடிய சாத்தியக்கூறுகளை நூறு விழுக்காடு பெற்றிருப்பதும் தமிழர்களே...

*உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாகம்
*இராணுவம்
*பொருளியல் மற்றும் வேளாண் வளங்கள்
*அயல் நாடுகள் இடையேயான உறவு...

என்கிற தனித்தேசத்திற்கான அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய கட்டமைப்புகளை நாம் மட்டுமே பெற்றிருக்கிறோம்.

#உட்கட்டமைப்பு_மற்றும்_நிர்வாகம்:

ஒரு நாட்டை நிர்வகிக்க தேவையான அத்தனை நிர்வாகக்கட்டமைப்பையும் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறது "தமிழீழ அரசு".

நிதித்துறை,நீதித்துறை,கல்வி தொடங்கி ஆதரவற்றோர் காப்பகம் வரை அனைத்துக்குமே நடைமுறை உதாரணத்தை வைத்திருப்பது  நாம் மட்டும் தான்.

தமிழகத்துக்கான அத்தனை தேவைகளையும் தமிழர்கள் எதிர்கொள்கிற அத்தனை சிக்கல்களுக்குமான நடைமுறை சாத்தியத்தோடு கூடிய தீர்வுகளை(நாம்தமிழர் செயல்பாட்டு வரைவு) வைத்திருப்பதும் தமிழர்களான நாம் மட்டுமே தான்...!!

#இராணுவம்:
இந்தியாவில் இருக்கிற எல்லா தேசிய இனங்களும் விடுதலை என்றதும் எதிர்கொள்கிற சிக்கலான பாதுகாப்பு சிக்கல் கூட நமக்கு எழ வாய்ப்பில்லை.

முப்பதுக்கும் மேற்பட்ட வல்லரசு நாடுகளை எதிர்த்து நிற்கிற ஆற்றலை நாம் பெற்றிருந்தோம்...பெற்றிருக்கிறோம்..!!

இந்தியாவில் பல போராளிக்குழுக்கள் தேசிய இன விடுதலைக்காக போராடினாலும் நமக்கிருப்பதை போன்ற இராணுவ கட்டமைப்பை எந்த தேசிய இனங்களும் இதுவரை பெற்றிருக்கவில்லை.

#பொருளியல்_மற்றும்_வேளாண்_வளங்கள்:

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறியது போல "இந்தியாவில் தமிழ்நாடும் கேரளாவும் தனித்தனி நாடுகளாக இருந்திருந்தால் உலக வல்லாதிக்க நாடுகளில் ஒன்றாக மாறியிருக்கும்"...என்கிற அளவுக்கு பொருளியல் வளங்களை நாம் மட்டுமே பெற்றிருக்கிறோம்.

கடல்வளம் என்கிற ஒற்றை வளத்தை உதாரணத்திற்கு எடு்த்தாலும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு 1070 கிமீ கடற்பரப்பை தமிழர்கள்  கொண்டிருக்கிறார்கள்.

இதுபோல நீர்வளம்,நிலவளம் காட்டுவளம்,கனிமவளம் என எல்லா வளங்களோடு வேளாண்மையிலும் தன்னிறைவு பெற்று தனித்தியங்கக்கூடிய சாத்தியம் தமிழர்களான நமக்கு மட்டுமே உண்டு.

இந்த மண் உலகில் எங்கு விளைகிற பயிரையும் உள்வாங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய மண்.

 ஆப்பிரிக்காவில் விளைகிற கோக்கோ முதல் சீனாவில் விளைகிற தேயிலை வரை இந்த மண்தான் ஏற்றிருக்கிறது.!!ஆக வேளாண் வளங்களையும் விளைபொருள் வளங்களையும் பெறுமதியான அளவு பெற்றிருப்பது நாம் மட்டும் தான்.

#அயல்நாடுகளிடையேயான_உறவு:

உலகம் முழுக்க எத்தனையோ தேசிய இனங்கள் பரவி பணம் வைத்திருந்தாலும்....நாம் மட்டுமே  உலகநாடுகளிலெல்லாம் அரசியலை வைத்திருக்கிறோம்.

ஏறுதழுவுதலுக்கான போராட்டமென்றாலும் சரி... நெடுவாசலுக்கான போராட்டமென்றாலும் சரி...உலகம் முழுக்க தமிழன் வாழ்கிற ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நகரிலும் "நாம் தமிழர்" என்கிற ஒற்றை குரல் எழுவதை நம்மால் மட்டுமே சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது.

உலகம் முழுக்க அதிபர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும்,செனட்டர்களாகவும்,மாகாண ஆளுநர்களாகவும் உள்ள தமிழர்கள் மூலம் இனத்திற்கான சிக்கல்களை உலக அரங்கில் ஒலிக்க வைக்கக்கூடிய சாத்தியங்களும் வலிமையும் கூட நமக்கு மட்டுமே உண்டு.

இப்படி ஒன்றுக்கும் உதவாத "இந்தியக்கருத்தியலை" தர்க்கரீதியாக உடைக்கக்கூடிய வலிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு...!!

இந்த சாத்தியங்களோடு இன்னொன்றை இணைக்கவேண்டியிருக்கிறது...

ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான உறவை நிரந்தர உறவாக  மாற்றவேண்டியதும் கட்டாயமானதாகும்...!!

ஈழமும் தமிழகமும் திருமண உறவிலும் ஒன்றிணைய வேண்டும்..!!
❤❤❤

பதிவு : தினேஷ் அசோகன்

Saturday, 19 May 2018

"உயிரே உயிரே" ஈழ நாவல்

2009 ஆம் ஆண்டு ஈழத்தில்  நமது தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட போரின் இறுதி நேர நிகழ்வுகளையும் கொடூரங்களையும் கண்முன்னே சித்தரித்து காட்டும் இந்த நாவல்
இதன் ஆசிரியரான ஆனதி அவர்களுக்கு நமது சார்பில் நன்றி செலுத்துவோம்

கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

உயிரே உயிரே நாவல் pdf

Wednesday, 16 May 2018

பொறியியல் வேண்டாம்.!

தேர்வு முடிவுகள் வந்தாச்சு... எனன படிக்கணும்னு ஏற்கனவே முடிவு செஞ்சிருபிங்க அதுக்கு முன்னாடி நான் சொல்றதையும் கேளுங்க

ஒரு பொறியியல் படிச்ச மாணவனாக சொல்கிறேன் தயவுசெய்து மேல்நிலை படிப்புக்காக பொறியியல் கல்லூரியில் சேர வேண்டாம்
ஏன்னா 2040 ஆம் ஆண்டு வரைக்கும் தேவையான பொறியாளர்கள் தற்போது உள்ளனர்..

நன்கொடை கொடுத்து சேருமளவுக்கு நம் பெற்றோரிடம் பணம் இருக்கிறதா என்பதை கொஞ்சம் கருத்தில் கொள்க

இப்போ இருக்குறவனுக்கே வேலை இல்லாதப்போ இனிமே படிக்கிறவங்களுக்கு ஏது  வேலை..? அப்படியே வேலை கெடச்சாலும் 5000-8000 ரூபாய் தான் சம்பளம் குடுக்குறாங்க.. இதையும் கவனத்தில் கொள்க

இருந்தும் நான் பொறியியல் படிப்பேன் என்றால் தற்சார்பு (autonomous) கல்லூரிகளில் படியுங்கள் ஏனென்றால் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கட்டுபாட்டு கல்லூரிகளில் படித்தால் படிப்புச்சுமை  காரணமாக நிகழ்ந்த தற்கொலைகளை கூகுள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

 தமிழகத்தில் மட்டும் தெருவுக்கொரு பொறியியல் கல்லூரிகலாய் மொத்தம் 600 கல்லூரிகளில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் நிலையில் அனைவருக்குமான வேலைவாய்ப்பை இந்த அரசு சாத்தியமாக்குமா../

பொறியியல் படித்தால் மட்டுமே சம்பாரிக்க முடியும் வாழ முடியும் என்ற கருத்தை மாற்றி கலை கல்லூரிகளிலும் விவசாய கல்லூரிகளிலும் இணைந்து நாடும் நாமும் முன்னேற பாடுபடுவோம்

5000 ரூபாய்க்கு அடுத்தவனிடம் அடிமையாய் வேலை பார்பதை விட ஒரு விவசாய கல்லூரியில் பட்டம் பெற்று நமது இயற்க்கை விவசாயத்தை எப்படி முன்னேற்றலாம் என்று ஆய்வு செய்து நம் சொந்த நிலத்தில் அதை பயிரிட்டு வளம்காப்போம் அதனால் நம் நலம் பெருகும்

நல்லதொரு  விவசாயத்தை நாம் பெற்ற அதே இயற்கையோடு நம் தலைமுறைக்கு பரிசளிப்போம்...!!


Monday, 14 May 2018

ஈழம் எனும் இரத்தகளம்...!!


இனம்
மொழி 
ஏகாதிபத்திய வெறியால்
வெடித்துச் சிதறி
நந்திக்கடலில் மிதக்கின்றன
மானுடத்தின் கைகளும் கால்களும்
உடல்களும் உணர்வுகளும்...

கொத்த ஒரு பசும் இலையுமின்றி
கண்களில் ரத்தம் கசியக்
காத்திருக்கின்றது
வெள்ளைபுறா...

வீசிச் சிரமறுத்த கத்திகளாலும்
வெடித்து சிதறும் குண்டுகளாலும்
துளைத்த துப்பாக்கி தோட்டாக்களாலும்
அசைக்க முடியவில்லை
அமைதியின் சிறகுகளை...!

#மே18

Sunday, 13 May 2018

Parasite எனப்படும் தமிழ் ஒட்டு சொற்கள்..



Parasite என்பது ஒட்டுண்ணி சொற்கள் எனப்படும். இந்த சொற்களைனைத்தும் வேற்றுமொழியிலிருந்து வந்து நம் தமிழ் சொற்களோடு ஒட்டி கலந்து நம் பேச்சு வழக்கில் தமிழ் சொற்களாகவே பிம்பம் பெற்றுவிட்டன.. 

நாம் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களில் 80 சதவிகித சொற்கள் இந்த ஒட்டு வகையை சேர்ந்த வேற்றுமொழி  சொற்கள்..

எடுத்துக்காட்டாக
தயார், சிப்பாய், தாசில்தார்,சாவி போன்ற சொற்கள் பாரசீக மொழியைச் சேர்ந்தவை

உண்டியல், சிபாரிசு, பட்டுவாடா, பல்லக்கு, பஞ்சாயத்து, காகிதம், பேட்டி போன்ற சொற்கள் இந்தி மொழிச் சொற்களாகும்

சரக்கு, சொகுசு, நிம்மதி, வேடிக்கை, எச்சரிக்கை, சொந்தம் இவையனைத்தும் தெலுங்கு மொழி சொற்களாகும்..

இதுபோல
அகந்தை, அகதி, அகராதி, அகிம்சை, அஞ்சலி, அதிகாரி, அதிகாலை, அபாயம், அலங்காரம், அம்சம், அவசரம், அவதாரம், அவமானம், ஆசை, ஆசிர்வாதம், ஆதரவு, ஆபத்து, ஆயுள், ஆர்வம், இதயம், இச்சை, இரத்தம், இதிகாசம், உச்சம், உச்சரிப்பு, உதாரணம், உபதேசம், உபயம், உல்லாசம், எமன், ஏகாந்தம், ஐம்பூதம், ஔடதம், கடிகாரம், கடினம், கணிதம், கவனம், கவி, காயம், கிரகம், கீதம், குமரி, கேவலம், கோகிலம், கோடி, சகுனம், சக்தி, சகோதரி, சந்திரன், சபதம், சமாதி, சமம், சமுதாயம், சம்மதம், சௌபாக்கியம், சித்தர், சுத்தம், சுகம், சுலபம், சூரியன், சேவை, தனம், தத்துவம், தந்திரம், தனம், தியானம், தியாகம், திலகம், தினசரி, தீபம், தீவிரம், துரோகம், தைரியம், நடனம், நவீனம், நித்திரை, நிபுணன், நீதி, பக்தி, படம், பதவி, பாக்கியம், பாதம், பிரியம், பிரபஞ்சம், பிரமாண்டம், புராணம், பூமி, போதை, மகுடம், மது, மந்திரி, மரணம், மாத்திரை, மாமிசம், மேகம், யோசனை, ரதம், லீலை, வயசு, வாகனம், வாதம், வாலிபம், விசாலம், விசுவாசம், விதவை, விந்தை, வியாபாரம், வீதி,

இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அநேக சொற்கள் தமிழ் சொற்கள் அல்ல ஒட்டுண்ணி வகையை சேர்ந்தசொற்கள் அவைகளை கண்டறிந்து புறந்தள்ளுவோம் 

பிறமொழி கலவாது தமிழ் பேசி மகிழ்வோம்...! 

இந்த PARASITE வார்த்தைகளுக்கு இணையான தமிழ் சொற்கள் அறிய வேண்டுமெனில் பின்னூட்டமிடுங்கள் (Comments)

#தமிழறிவோம்

Saturday, 7 April 2018

காவிரி மேலாண்மை வாரியம் என்ன செய்யும்...?



20 ஆண்டுகளுக்கு மேலாக பாசன மேலாண்மை,நீர்தேக்க நிர்வாக துறைகளில் அனுபவம் கொண்ட ஒரு தலைவர் மற்றும் இரண்டு முழு நேர உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கும் . இது தவிர நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் தகுதியில் உள்ள ஒருவரும், வேளாண் துறையில் ஆணையர் தகுதியில் உள்ள ஒருவரும் பகுதிநேரமாக நியமிக்கபடுவார்கள்

காவிரி நீரை பங்கிட்டு கொள்ளும் தமிழகம் கர்நாடகம் புதுச்சேரி கேரளா போன்ற மாநிலங்களுக்கு தலா ஒரு உறுப்பினர் இடம்பெறுவார். இந்த நான்கு மாநிலங்களையும் சேராத கண்காணிப்பு பொறியாளர் தகுதியில் உள்ள வெளிமாநிலத்தவர் ஒருவர் வாரியச்செயலாளராக நியமிக்கபடுவார்.. வாரிய செயலருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி,ஹேமாவதி ஹேரங்கி
தமிழகத்தில் உள்ள மேட்டூர் பவானிசாகர்,அமராவதி
கேரளாவில் உள்ள பானாசுரசாகர் போன்ற காவிரி சார்ந்த அணைகள் அனைத்தும் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்
நிர்வாகம்,மேற்ப்பார்வை,மேலாண்மை,பராமரிப்பு என்று அனைத்தையுமே வாரியமே நிர்வகிக்கும்..

தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் வாரியம் நடைமுறைப்படுத்தும் ..
உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் அணைகளுக்கு சென்று பார்வையிடலாம்
பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்து எதுவோ அதுவே வாரியத்தின் முடிவாக இருக்கும்...

காவிரி மேலாண்மை வாரியம் ஏன் தேவை..??




தமிழ்நாட்டுக்குக் காவிரியில் சராசரியாக ஆண்டுக்கு 396 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து வந்தது. 1975-க்குப் பிறகு இந்தத் தண்ணீரின் அளவு குறைந்துகொண்டே வந்ததால் காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டு 1991ல் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு  205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்று இடைக்கால தீர்ப்பளித்தது. 2007ல் நடுவர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டின் தண்ணீர் அளவைக் குறைத்து 192 டி.எம்.சி. தரவேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பகுதி 5-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் இந்த உத்தரவு செல்லுபடியாகும். மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பே துண்டுச்சீட்டில் எழுதிய கிறுக்கல் ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறோம் எனக் கூறியுள்ளனர்.  
2.    நடுவர் நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீர் போதுமானது அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். அவர்களோ மேலும் தண்ணீரின் அளவைக் குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தந்தால் போதும் என்று தீர்ப்பளித்துவிட்டனர்.  
3.    காவிரி நீர் கண்காணிப்புக் குழு என்பது பெயரளவில் முன்பே இருக்கு. 1998ல் பிரதமர் தலைமையில் 4 மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவி செய்ய ஒழுங்குமுறை குழுவும் உண்டு. இந்த ஆணையத்திற்கு அணைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை. கண்காணிப்புக் குழுவும் பயனற்றது. இவற்றால் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைப் பெற்றுத்தர இயலாது.  
4.    காவிரி மேலாண்மை வாரியம் என்பது கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் காவிரியில் கட்டப்பட்டுள்ள அணைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். ஒவ்வொரு மாதத்துக்கும் தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீரை விடவேண்டும் என்ற நடுவர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி தண்ணீரைப் பகிர்ந்து கொடுக்கும்.  
5. காவிரி மேலாண்மை வாரியம் இல்லாவிட்டால் நாம் `கருணையின் அடிப்படையில் தண்ணீர் கொடு' என்று கர்நாடகத்தை கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும். கர்நாடகா விருப்பமிருந்தால் தண்ணீர் கொடுக்கும், இல்லையென்றால் மறுத்துவிடும். நாம் கட்டாயப்படுத்த முடியாது. இதனால்தான் கர்நாடகம் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
6. காவிரி நடுவர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசைத் தொடர்ந்து கட்டாயப்படுத்திக்கொண்டேதான் வந்தது. சென்ற ஆண்டுகூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கு  அதிகாரமில்லை என்று மத்திய அரசு வாதிட்டது. ஆக, தமிழ்நாட்டுக்கு உரிய  நீர் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது  
7. காவிரி நீரைப் பங்கீட்டுத்தர ஸ்கீம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது மேலாண்மை வாரியத்தைதான்.  அதனுடன் நீர்கண்காணிப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.    ஆனால், மத்திய அரசோ 6 வார காலஅவகாசத்தை வீணடித்துவிட்டு, இறுதி நாளில் ஸ்கீம் என்றால் என்ன? அதன் செயல் திட்டம் பற்றி விளக்கம் வேண்டும் என்று வார்த்தை விளையாட்டில் விளையாடுகிறது.  
8.  ஆக மொத்தத்தில் தமிழகத்துக்குக் காவிரிநீரைப் பெற்றுத்தர மறுப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.  அதனால்தான், சட்டத்தின் ஓட்டையைத் தேடி அலைகிறது. மத்திய அரசுக்குப் பாடம் புகட்ட, அரசியல் கட்சியினர் மற்ற அமைப்பினர் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமை உணர்வுடன் தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரின் உரிமையைப் பெறுவதில்உறுதியாகச் செயல்பட வேண்டும் 


Friday, 6 April 2018

இவனுங்கள என்னதான் பண்றது..????


இவனுங்களுக்கு காது கேக்குமா..??? இல்ல கேக்காத மாதிரி நடிக்கிறாங்களா..?

நம்ம sterlite வேண்டாம்னு சொல்றோம் கேக்கமாற்றாங்க
காவிரி வாரியம் வேண்டும்னு சொல்றோம் அதையும்கேக்கமாற்றாங்க

சம்பந்தமே இல்லாமா பாவம் அண்ணா யுனிவெர்சிட்டி பசங்கள சாகடிகிரதுக்கு ஒரு பன்னாடைய கொண்டு வந்து ஏறக்கிறுக்காங்க..

அண்ணன் கார்டூனிஸ்ட் பாலா சொன்னதுமாதிரி
"காங்கிரஸ் ஈழத்தமிழர்களை அழிக்க துணை நின்றது..
பாஜக இந்திய தமிழர்களை அழிக்க சதி திட்டம் போடுகிறது"
ஆனா இடையில இந்த இன்ஜினியரிங் பசங்களா ஏன்டா சாவடிக்கிறிங்க...???

கெளதம் இளங்கோ





Tuesday, 27 March 2018

வாழட்டும் தமிழன்னை...வெல்லட்டும் தமிழ்...!!




நானும் என் தமிழும் 




தேடிச்சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப் பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கு இரையானபின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேன் என்றே நினைத்தாயோ..
                                    “பாரதி”

இந்த பெயரின் வசீகரம் என்னை உண்ண
தமிழின் மீது ஆர்வம் அளவின்றி என்னுள் ஊறியது

அன்னிய மொழியில் கற்பது கண்ணியமில்லை என எண்ணி தமிழ் வழியில் பள்ளிக்கல்வி பயின்றேன்..
வயிற்றுப்பசியை போக்க தந்தையின் வயல்வெளி
அறிவுப்பசியை போக்க அன்னையின் தமிழ்மொழியென செழிப்பாய் கழிந்தது பள்ளிபருவம்..

பொறியியல் படிக்க எனக்கு ஆசை ஆனால் ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய கட்டாயம்..
தாங்கி வளர்த்த தாய் வீட்டை தாண்டி செல்லும் பருவப்பெண்ணின் மனநிலை எனது..

குழந்தையின் அழுகை அறிந்து தாய் கண்துடைப்பது போல அரசாங்கத்தின் புது முயற்ச்சி.. பொறியியல் தமிழில் படிக்கலாம் என்றும், உத்தியோகத்திற்கு உத்திரவாதம் உண்டு என்ற அறிக்கை வெளியாக... உதிர்ந்த மலர்கள் தானாக சுழன்று தாவி உதிர்ந்த கிளையினை அடைவது போல வியப்பு எனக்குள்..
விரைந்து சென்று சேர்ந்தேன் தமிழில் பொறியியல் கற்க..

அரசியல் தலைவர்கள் மேல் பெரும் மதிப்பு
தமிழில் புத்தகங்கள் புது பதிப்பு
தொட்டுத்தழுவி விரும்பிப்படித்தேன்.. 

ஆங்கில வழி பயிலும் மாணவர்களின் அலட்சிய பார்வை உனது உலகம் சிறிது என கூறுவதை போல் இருந்தது..
என் உலகம் சிறிதெனினும் தன்மானத்துடன் வாழும் தமிழன் என்ற கர்வத்தினால் அவர்களின் அலட்சியத்தை நான் அலட்சியப்படுத்தினேன்.. ஆனால் அவர்களின் அகந்தையின் அர்த்தம் அப்போது புரியவில்லை. நான்கு வருடம் கழித்து புரிந்தது..

பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு கல்லூரியில்... போரில் சிப்பாய்கள் போல சீறினார் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்கள்.. அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த குடிமகனாய் நான்
போட்டியிட்டு தோற்றுப்போயிருந்தால் கூட போட்டியிட்ட மகிழ்ச்சியாவது மிஞ்சும்.. போட்டியிடாமலே தோற்றுப்போன எங்களுக்கு அந்த ஆறுதல் கூட இல்லை..

கல்லூரி முடிய நான் வேலையில்லா பட்டதாரி
பல நிறுவனங்களின் படிகளை ஏறி ஏறி அவர்கள்  மாறி மாறி கேட்ட கேள்விகளின் ஒலி வேறு ஆனால் கேள்வி ஒன்றுதான் “Why you didn’t study Engineering in English..??”

என் நாட்டில் என் மொழி படித்து என்ன மதிப்பு என்ற கோவம்..

காற்றில் கரையும் வார்த்தைகள் தானே என்று வாக்குறுதிகளை தூக்கிலேற்றிய அரசின் மீது வெறுப்பு..
.
பொருளின்றி இருளில் மூழ்கிய வாழ்கையை வாழ்வதில் பொருளென்ன என்ற குழப்பம்..

அடுத்து என்ன செய்யபோகிறோம் என்ற எதிர்காலம் கொடுத்த பதற்றம்..

இதையும் தாண்டி ஆங்கிலத்தில் பயின்றால் தான் வேலை என்ற எண்ணம் கொடுத்த அருவருப்பு..

தமிழ் ஆசிரியனாகவோ, எழுத்தாளனாகவோ  என் தமிழைக் கொண்டு நான் பிழைத்திருக்க முடியும்
ஆனால் நான் படித்த பொறியியல் படிப்புக்கான வேலை என்றைக்காவது ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு

என் தமிழன்னையின் ஆசியால் நான் நினைத்தவாறு என் வாழ்கை ஒரு நாள் மாறும் என்பதில் ஐயமில்லை ஆனால் தன் தாய் மொழியில் பேசுதல் அநாகரிகம் என்று அடுத்த தலைமுறையிடம் வெட்கமின்றி எடுத்துரைக்கும் மக்கள் மத்தியில் என் தமிழ் வாழுமா என்ற ஐயத்திற்கு பதிலில்லை..

இருந்தாலும் என்னை போன்ற தமிழ் பயின்ற ஏனையோர்களால் வாழட்டும் தமிழன்னை
வெல்லட்டும் தமிழ்...!



Sunday, 25 March 2018

மரித்த மனிதம் மலரட்டும்..! (சிறுகதை)


கூட்டத்தில் ஒருவராய் தொலைந்து கொண்டிருக்கும் 'மனிதம்' 
நேயம் கொண்ட சிலரால் மலரட்டும்

மரித்த மனிதம் மலரட்டும்



வழக்கமாய் இந்த வழியாக தான் அகமதுதன் கல்லூரிக்கு சென்று வருகிறான்,
எப்போதும் போல் இல்லாமல் அன்றைக்கு ஒரு பெரும் கூட்டம்அந்த வண்டியூர் பேருந்து நிறுத்தம் .

அது என்ன என்று விசரிப்பதற்காக தனது பைக்கிலிருந்து கீழே இறங்கினான், "என்னப்பா என்ன ஆச்சு"..?? இல்லைங்க சார்ஒரு கிழம்போதைனு நினைக்கிறேன்குப்புற படுத்து கிடக்குஒரே நாத்தம்குடல புடுங்குது என்றான்..ஒருவன்.
இந்த நூற்றாண்டில் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தாலோஇல்லை தாக்கப்பட்டு கீழே கிடந்தாலோ அவர் குடித்ததாகவே கருதப்படுகிறது... 

அகமது அத்துனை நபர்களையும் கடந்து அந்த பெரியவரின் அருகில் சென்றான்.. "அவரின் மேல் ஈ மொய்த்து கொண்டிருந்தது.. அந்த பையன் சொன்னது போல லேசான வாடையும் வீசியதுஅவரை தூக்க முற்பட்டான்..

அதற்குள் கூட்டத்தில் ஒருவன், "ஏன் சார் உங்களுக்கு இந்த வேலகண்ணு முண்ணு தெரியாம குடிச்சிட்டு கிடப்பாங்கஅவர போய் ஏன் தூக்குறிங்க".. விடுங்க சார்போய் உங்க வேலைய பாருங்க..என்றான்..அவனை போன்ற அவிப்ராயம் கொண்ட ஒரு பெரும் கூட்டத்தின் நடுவே அகமது மட்டும் சற்று மனிதத்துடன் இருந்தான்..பல நேரங்களில் "மனிதம்" இறந்து விட்டது போல் உணர்ந்தாலும்..கொஞ்ச நஞ்சம் உள்ள மனிதத்தையும் மரணிக்க செய்யக்கூடாது என்பதற்காகஅவர்கள் சொல்லும் எதையும் செவி ஏற்காமல்..அவரை தூக்க முற்பட்டான்

கூட்டத்தில் மற்றொருவர், "சார் விடுங்க சார்இவனுக மாரி ஆளுக்கெல்லாம்பட்டத்தான் புத்தி வரும்..பெரிய ஹீரோசோசியலிசம்னு ரொம்ப பேசுவாங்க"..பின்னால போலீஸ் கேஸ்னுஅலயரப்ப நாம சொன்னதுலாம் உரைக்கும்.. "இந்த காலங்களில் உதவி செய்வதற்கு ஹீரோக்கள் மட்டுமே தேவை படுகின்றனர்என்னை போன்ற மனிதர்கள்சாமானியர்கள் யாரும் உதவி செய்ய கூடாதாஅப்படியும் மீறி சில மனிதங்கள் உதவ முற்பட்டால்அவர்களையும் போலீஸ்,கேஸ்னு சொல்லி தடுத்து விடுகிறதுஇந்த புறம் பேசும் சமூகம்..அப்படியும் மீறி உதவி செய்பவர்கள் வெகு சிலரே.. பாதிக்க பட்டு கிடக்கும் நபரை சுற்றிசுற்றி நின்று போட்டோவீடியோ எடுக்கும் ஆயிரம் கைகளில் ஒரு கை இணைந்தால் கூட பாதிக்க பட்டவரை எளிதில் காப்பாற்றி விடலாம்..என பல்வேறு என்ன அலைகள்அவரை தூக்க போகும் அந்த
நேரத்தில் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது...

மேலும்கூட்டத்தில் மற்றொருவர், "சார் பாக்க என் தம்பி
மாரி இருக்கீங்கஏன் வேஸ்டா ரிஸ்க் எடுக்குறிங்கவிடுங்க சார்"என்றார்..அவரையும் தனது சிறிய புன்முறுவலுடன் எதிர்நோக்கினான்அகமது.. மனிதம் இத்தனை பேர் மத்தியிலும் இறந்து விட்டதை எண்ணி மனம் வருந்தினான்என்று நாம் சுயநலமாக வாழாமல் பிறர் நலனுக்காக வேண்டாம்பிறர் நலத்தில் சில அக்கறையுடன் வாழ வேண்டும்அன்று தான் மனிதம் மீண்டும்உயிர்ப்பித்து எழும்..என்று நாம்சினிமா மற்றும் சினிமா காரர்களுக்காக செய்யும் உதவியை போல ரோட்டில் கிடக்கும் யாருக்கேனும்செய்ததில்லை..
தன் அபிமான நடிகரின் பிறந்த நாளுக்காக ரத்தம் கொடுக்கும் நம் சமுதாயம்சாமனியரின் உயிரை காக்க வேண்டிய நேரத்தில் ரத்தம் கொடுப்பதில்லை ..தனது அரசியல் கட்சி தலைவனுக்கு பிறந்த நாளுக்கு பிரியாணி பொட்டனம் வழங்கும் நாம்..பசி என்று கேக்கும் பெரியவருக்கு பத்து ரூபாய் கூட கொடுப்பதில்லை.. இது தான் நம் சமுதாயம் நாம் மாற வேண்டும்.. இல்லை அதற்கான முயற்சியாவது செய்ய வேண்டும்..என்று எண்ணினேன்.

அவரை தூக்கி அந்த தூணில் சர்த்தினான்பேச்சு சுதாரிப்பு இல்லைபக்கத்தில் இருக்கும் ஸ்கூல் பையனின் தண்ணீர் பாட்டிலை வாங்கிமூஞ்சில் தண்ணீர் தெளித்தான்சுதாரித்தார்.. "தன் கை சைகையால் சாப்பாடு சாப்பாடு வேண்டும் என்றும், 2 என்றும் காண்பித்தார்.."சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சுஎன்பதை உணர்ந்தான்..பக்கத்து டீ கடையில் இருந்துஒரு டீயும் இரண்டு பன்னையும் வாங்கி வந்து கொடுத்தான்..தொண்டை அடைக்க அடைக்க உண்டார்..டீயை குடித்து முடிந்தவுடன் தன் இருக்கை கூப்பி வணங்கினார் அந்த பெரியவர்அகமது அவரின் கையை கீழிறக்கி அவரை பார்த்து புன்முறுவினான்கூட்டம் முழுவதும் அமைதியாய் அவர்களின் செயல்களை உற்று நோக்கியதுஅவன் அந்த கூட்டத்தை கடந்து சென்றான்..கடந்து சென்று தனது பைக்கில் ஏறினான்தனது கை கடிகாரத்தில் மணியை பார்த்துவிட்டு, "ஐயோகாலேஜுக்கு லேட் ஆயிடுச்சேஎன்று கிக்கரை உதைத்து..இனியாவது மனிதம் மலரும் என்று எண்ணி தனது கல்லூரி நோக்கி புறப்பட்டான்..!!


பெயர்க்காரணம் 
கதை நாயகனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என முகநூல் உறவுகளிடம் வினவிய பொழுது நிறைய பெயர்களை பரிந்துரை செய்தனர் ஆனால் இந்த படத்தை பார்த்த பின்பு ஒரு இஸ்லாமிய பெயர் கதைநாயகனுக்கு சூட்டலாம் என நினைத்தேன் 
இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல என்பதனை மீண்டும் நிரூபிக்கவே இந்த சிறுகதையின் நாயகனுக்கு "அகமது" என பெயரிட்டுள்ளேன்..



இது நான் பிரசவிக்கும் முதல் மழலைச் சிறுகதை
இதை எழுத ஊக்கபடுத்திய எனது முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் முக்கியமாக கதைக்கரு கொடுத்து எழுதசொன்ன மேகநாதன் அண்ணனுக்கும் எனது அன்பான நன்றிகள்  

கெளதம் இளங்கோ


Thursday, 22 March 2018

மதுரையில் குளம் கண்மாய்களுக்கு கண்ணீர் அஞ்சலி

அழிக்கப்பட்ட நீராதாரங்களுக்கு அஞ்சலி 
======================================
நாணல் நண்பர்கள் சார்பாக மதுரையில் அரசால் அழிக்கப்பட்ட நீராதரங்களுக்கு கண்ணீர் அஞ்சலி  செலுத்தப்பட்டது. 
ஆக்கிரமிப்புகள், கட்டிடட கழிவுகள், மாநகராட்சி கழிவுகள் கலக்கும் சாக்கடையாக மாற்றப்பட்ட வைகை ஆற்றுக்கு முதலில் சருகுகள் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


பிறகு ஆவின் பால்பண்ணையாக மாற்றப்பட்ட மதிச்சியம் கண்மாய், உலக தமிழ்ச் சங்கக் கட்டிடமாக,சட்டக்கல்லூரியாக, மாநராட்சி அலுவலகமாக மாற்றப்பட்ட தல்லாகுளம் கண்மாய், மாவட்ட நீதிமன்றமாக மாற்றப்பட்ட செங்குளம் கண்மாய், வருமான வரி அலுவலகமாக மாற்றப்பட்ட பீ.பீ.குளம் கண்மாய், மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பாக மாற்றப்பட்ட புதூர் கண்மாய், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமாக மாற்றப்பட்ட சம்பக்குளம் ஊரணி, பல்வேறு ஆக்கிரமிப்புகள் கழிவுகளால் அழிக்கப்பட்ட சாத்தையாறு, கிருதுமால் நதி, மாட்டுத்தாவணி பேருந்துநிலையம், பூ மார்கெட்டாக மாற்றப்பட்ட வண்டியூர் கண்மாய், எல்காட் தொழில்நுட்ப பூங்காவாக மாற்றப்பட்ட இலந்தைக்குளம் கண்மாய் இறுதியாக சென்னை உயர் நீதிமன்றமாக மாற்றப்பட்ட உலகனேரி கண்மாய் என மதுரையில் அரசால் அழிக்கப்பட்ட நீராதாரங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.








இந்த நீர்நிலைகள் தவிர மதுரையில் உள்ள மற்ற நீர்நிலைகள் எல்லாம் நன்றாக, உயிர்ப்போடு இருக்கிறது என்ற எண்ணத்திற்கு யாரும் வர வேண்டும். இது தவிர பிற எல்லா நீர்நிலைகளும் அழிந்து போகும் நிலையில்தான் இருக்கிறது. அஞ்சலி செலுத்த நேரமில்லாமல் போய்விட்டது. அடுத்த வருடம் அஞ்சலி செலுத்திக் கொள்வோம். கிரானைட் குவாரிகளால் மேலூர் பகுதியில் அழிக்கப்பட்ட 50கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு அஞ்சலி செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதன் ஆணி வேறாக இருக்கும் ஏகாதிபத்தியமும், உலகமயமும், அதற்க்கு அடிபணியும் அரசுகளும், அதற்கேற்ற கொள்கைகளுமே வீழ்த்தப்பட வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று நீதிமன்றங்களால் உத்தரவிடப்பட்டு, அதன் பேரில் அரசு நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்ட, சீரமைக்கப்பட்ட ஏதேனும் ஒரு நீர்நிலையை நம்மால் கைநீட்டி காட்ட முடியுமா? இனி யாரிடம்தான் நாம் போய் முறையிடுவது? இங்கு நீதிமன்றங்களே நீர்நிலைகளுக்குள் இருக்கிற போது நாம் என்னதான் செய்வது?


மிகப்பெரிய மழைநீர் சேகரிப்பு தொட்டியான நீர்நிலைகளை அழித்துவிட்டு, மழைநீரை சேமியுங்கள் என்று மக்களை வலியுறுத்துகிற அரசின் போக்கு ஒரு நகைமுரண். தொழிற்ச்சாலை மற்றும் நகராட்சி கழிவுகளை நீர்நிலைகளுக்குள் செல்வதை வேடிக்கை பார்க்கிற அரசாங்கம், நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டாதீர்கள் என்று மக்களை பார்த்து சொல்வது கொடுமையில்லையா? எல்லாவற்றுக்கும் மக்கள்தான் காரணம், அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து பல தன்னார்வ அமைப்புகளை வைத்து செய்து கொண்டே இருக்கிறது. நீர் என்பது நமது உரிமை. அது ஒட்டுமொத்த உலக உயிரினங்களின் உரிமை. நீர் ஒரு விற்பனை பண்டமல்ல. மக்கள்தான் வரலாற்றை மாற்றுகிறார்கள். மக்கள்தான் வரலாற்றை படைக்கிறார்கள். இந்த உலகமய போக்கிற்கு எதிராக மக்களை ஒன்றிணைப்போம்..