தேர்வு முடிவுகள் வந்தாச்சு... எனன படிக்கணும்னு ஏற்கனவே முடிவு செஞ்சிருபிங்க அதுக்கு முன்னாடி நான் சொல்றதையும் கேளுங்க
ஒரு பொறியியல் படிச்ச மாணவனாக சொல்கிறேன் தயவுசெய்து மேல்நிலை படிப்புக்காக பொறியியல் கல்லூரியில் சேர வேண்டாம்
ஏன்னா 2040 ஆம் ஆண்டு வரைக்கும் தேவையான பொறியாளர்கள் தற்போது உள்ளனர்..
நன்கொடை கொடுத்து சேருமளவுக்கு நம் பெற்றோரிடம் பணம் இருக்கிறதா என்பதை கொஞ்சம் கருத்தில் கொள்க
இப்போ இருக்குறவனுக்கே வேலை இல்லாதப்போ இனிமே படிக்கிறவங்களுக்கு ஏது வேலை..? அப்படியே வேலை கெடச்சாலும் 5000-8000 ரூபாய் தான் சம்பளம் குடுக்குறாங்க.. இதையும் கவனத்தில் கொள்க
இருந்தும் நான் பொறியியல் படிப்பேன் என்றால் தற்சார்பு (autonomous) கல்லூரிகளில் படியுங்கள் ஏனென்றால் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கட்டுபாட்டு கல்லூரிகளில் படித்தால் படிப்புச்சுமை காரணமாக நிகழ்ந்த தற்கொலைகளை கூகுள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் மட்டும் தெருவுக்கொரு பொறியியல் கல்லூரிகலாய் மொத்தம் 600 கல்லூரிகளில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் நிலையில் அனைவருக்குமான வேலைவாய்ப்பை இந்த அரசு சாத்தியமாக்குமா../
பொறியியல் படித்தால் மட்டுமே சம்பாரிக்க முடியும் வாழ முடியும் என்ற கருத்தை மாற்றி கலை கல்லூரிகளிலும் விவசாய கல்லூரிகளிலும் இணைந்து நாடும் நாமும் முன்னேற பாடுபடுவோம்
5000 ரூபாய்க்கு அடுத்தவனிடம் அடிமையாய் வேலை பார்பதை விட ஒரு விவசாய கல்லூரியில் பட்டம் பெற்று நமது இயற்க்கை விவசாயத்தை எப்படி முன்னேற்றலாம் என்று ஆய்வு செய்து நம் சொந்த நிலத்தில் அதை பயிரிட்டு வளம்காப்போம் அதனால் நம் நலம் பெருகும்
நல்லதொரு விவசாயத்தை நாம் பெற்ற அதே இயற்கையோடு நம் தலைமுறைக்கு பரிசளிப்போம்...!!

No comments:
Post a Comment