Parasite என்பது ஒட்டுண்ணி சொற்கள் எனப்படும். இந்த சொற்களைனைத்தும் வேற்றுமொழியிலிருந்து வந்து நம் தமிழ் சொற்களோடு ஒட்டி கலந்து நம் பேச்சு வழக்கில் தமிழ் சொற்களாகவே பிம்பம் பெற்றுவிட்டன..
நாம் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களில் 80 சதவிகித சொற்கள் இந்த ஒட்டு வகையை சேர்ந்த வேற்றுமொழி சொற்கள்..
எடுத்துக்காட்டாக
தயார், சிப்பாய், தாசில்தார்,சாவி போன்ற சொற்கள் பாரசீக மொழியைச் சேர்ந்தவை
உண்டியல், சிபாரிசு, பட்டுவாடா, பல்லக்கு, பஞ்சாயத்து, காகிதம், பேட்டி போன்ற சொற்கள் இந்தி மொழிச் சொற்களாகும்
சரக்கு, சொகுசு, நிம்மதி, வேடிக்கை, எச்சரிக்கை, சொந்தம் இவையனைத்தும் தெலுங்கு மொழி சொற்களாகும்..
இதுபோல
அகந்தை, அகதி, அகராதி, அகிம்சை, அஞ்சலி, அதிகாரி, அதிகாலை, அபாயம், அலங்காரம், அம்சம், அவசரம், அவதாரம், அவமானம், ஆசை, ஆசிர்வாதம், ஆதரவு, ஆபத்து, ஆயுள், ஆர்வம், இதயம், இச்சை, இரத்தம், இதிகாசம், உச்சம், உச்சரிப்பு, உதாரணம், உபதேசம், உபயம், உல்லாசம், எமன், ஏகாந்தம், ஐம்பூதம், ஔடதம், கடிகாரம், கடினம், கணிதம், கவனம், கவி, காயம், கிரகம், கீதம், குமரி, கேவலம், கோகிலம், கோடி, சகுனம், சக்தி, சகோதரி, சந்திரன், சபதம், சமாதி, சமம், சமுதாயம், சம்மதம், சௌபாக்கியம், சித்தர், சுத்தம், சுகம், சுலபம், சூரியன், சேவை, தனம், தத்துவம், தந்திரம், தனம், தியானம், தியாகம், திலகம், தினசரி, தீபம், தீவிரம், துரோகம், தைரியம், நடனம், நவீனம், நித்திரை, நிபுணன், நீதி, பக்தி, படம், பதவி, பாக்கியம், பாதம், பிரியம், பிரபஞ்சம், பிரமாண்டம், புராணம், பூமி, போதை, மகுடம், மது, மந்திரி, மரணம், மாத்திரை, மாமிசம், மேகம், யோசனை, ரதம், லீலை, வயசு, வாகனம், வாதம், வாலிபம், விசாலம், விசுவாசம், விதவை, விந்தை, வியாபாரம், வீதி,
இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அநேக சொற்கள் தமிழ் சொற்கள் அல்ல ஒட்டுண்ணி வகையை சேர்ந்தசொற்கள் அவைகளை கண்டறிந்து புறந்தள்ளுவோம்
பிறமொழி கலவாது தமிழ் பேசி மகிழ்வோம்...!
இந்த PARASITE வார்த்தைகளுக்கு இணையான தமிழ் சொற்கள் அறிய வேண்டுமெனில் பின்னூட்டமிடுங்கள் (Comments)
#தமிழறிவோம்
உண்மை தான் சகோதரரே..இது முந்தைய சந்ததியினர் செய்த தவறு. நம் காலங்களில் முடிந்த வரை பிற மொழிச் சொற்களை தவிர்ப்போம். வாழ்த்துக்கள் சில தூய தமிழ் சொற்களை தெளிவு செய்தமைக்கு. நன்றி சகோதரரே பயணம் சிறக்கட்டும். தமிழ் என்ற உறவோடு.
ReplyDeleteநன்றி சகோதரா... நாலு பேருக்கு தெரியும்படி இதை பகிரலாம்
Deleteசுத்த தமிழில் பேச ஆசை தான் முடியவில்லை, தெரியவில்லை.....
ReplyDeleteமுடிந்தவரை முயல்வோம்... பிறமொழி கலவாத தமிழை நம் பிள்ளைகளுக்கு பரிசளித்து செல்வோம்
Deleteசுத்த தமிழில் பேச ஆசை தான் முடியவில்லை, தெரியவில்லை...
ReplyDelete