மொழி
ஏகாதிபத்திய வெறியால்
வெடித்துச் சிதறி
நந்திக்கடலில் மிதக்கின்றன
மானுடத்தின் கைகளும் கால்களும்
உடல்களும் உணர்வுகளும்...
கொத்த ஒரு பசும் இலையுமின்றி
கண்களில் ரத்தம் கசியக்
காத்திருக்கின்றது
வெள்ளைபுறா...
வீசிச் சிரமறுத்த கத்திகளாலும்
வெடித்து சிதறும் குண்டுகளாலும்
துளைத்த துப்பாக்கி தோட்டாக்களாலும்
அசைக்க முடியவில்லை
அமைதியின் சிறகுகளை...!
#மே18
அடக்க முடியாத வலியும். அழியாத் தழும்பும்.
ReplyDelete