கூட்டத்தில் ஒருவராய் தொலைந்து
கொண்டிருக்கும் 'மனிதம்'
நேயம் கொண்ட சிலரால் மலரட்டும்
மரித்த மனிதம்
மலரட்டும்
வழக்கமாய் இந்த வழியாக தான் அகமது, தன் கல்லூரிக்கு சென்று வருகிறான்,
எப்போதும் போல் இல்லாமல் அன்றைக்கு ஒரு பெரும் கூட்டம், அந்த வண்டியூர்
பேருந்து நிறுத்தம் .
அது என்ன என்று விசரிப்பதற்காக தனது பைக்கிலிருந்து கீழே இறங்கினான், "என்னப்பா என்ன ஆச்சு"..?? இல்லைங்க சார், ஒரு கிழம், போதைனு நினைக்கிறேன், குப்புற படுத்து கிடக்கு, ஒரே நாத்தம், குடல புடுங்குது என்றான்..ஒருவன்.
இந்த நூற்றாண்டில் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தாலோ, இல்லை தாக்கப்பட்டு
கீழே கிடந்தாலோ அவர்
குடித்ததாகவே கருதப்படுகிறது...
அகமது அத்துனை நபர்களையும் கடந்து அந்த பெரியவரின் அருகில் சென்றான்..
"அவரின் மேல் ஈ மொய்த்து கொண்டிருந்தது.. அந்த பையன் சொன்னது போல லேசான
வாடையும் வீசியது, அவரை தூக்க முற்பட்டான்..
அதற்குள் கூட்டத்தில் ஒருவன், "ஏன் சார் உங்களுக்கு இந்த வேல, கண்ணு முண்ணு தெரியாம குடிச்சிட்டு கிடப்பாங்க, அவர போய் ஏன் தூக்குறிங்க".. விடுங்க சார், போய் உங்க வேலைய பாருங்க..என்றான்..அவனை போன்ற அவிப்ராயம் கொண்ட ஒரு பெரும் கூட்டத்தின் நடுவே அகமது மட்டும் சற்று மனிதத்துடன் இருந்தான்..பல நேரங்களில் "மனிதம்" இறந்து விட்டது போல் உணர்ந்தாலும்..கொஞ்ச நஞ்சம் உள்ள மனிதத்தையும் மரணிக்க செய்யக்கூடாது என்பதற்காக, அவர்கள் சொல்லும் எதையும் செவி ஏற்காமல்..அவரை தூக்க முற்பட்டான்
கூட்டத்தில் மற்றொருவர், "சார் விடுங்க சார், இவனுக மாரி ஆளுக்கெல்லாம், பட்டத்தான் புத்தி வரும்..பெரிய ஹீரோ, சோசியலிசம்னு ரொம்ப பேசுவாங்க"..பின்னால போலீஸ் கேஸ்னு, அலயரப்ப நாம சொன்னதுலாம் உரைக்கும்.. "இந்த காலங்களில் உதவி செய்வதற்கு ஹீரோக்கள் மட்டுமே தேவை படுகின்றனர், என்னை போன்ற மனிதர்கள், சாமானியர்கள் யாரும் உதவி செய்ய கூடாதா, அப்படியும் மீறி சில மனிதங்கள் உதவ முற்பட்டால், அவர்களையும் போலீஸ்,கேஸ்னு சொல்லி தடுத்து விடுகிறது, இந்த புறம் பேசும் சமூகம்..அப்படியும் மீறி உதவி செய்பவர்கள் வெகு சிலரே.. பாதிக்க பட்டு கிடக்கும் நபரை சுற்றி, சுற்றி நின்று போட்டோ, வீடியோ எடுக்கும் ஆயிரம் கைகளில் ஒரு கை இணைந்தால் கூட பாதிக்க பட்டவரை எளிதில் காப்பாற்றி விடலாம்..என பல்வேறு என்ன அலைகள், அவரை தூக்க போகும் அந்த
நேரத்தில் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது...
மேலும், கூட்டத்தில் மற்றொருவர், "சார் பாக்க என் தம்பி
மாரி இருக்கீங்க, ஏன் வேஸ்டா ரிஸ்க் எடுக்குறிங்க, விடுங்க சார்", என்றார்..அவரையும் தனது சிறிய புன்முறுவலுடன் எதிர்நோக்கினான், அகமது.. மனிதம் இத்தனை பேர் மத்தியிலும் இறந்து விட்டதை எண்ணி மனம் வருந்தினான், என்று நாம் சுயநலமாக வாழாமல் பிறர் நலனுக்காக வேண்டாம், பிறர் நலத்தில் சில அக்கறையுடன் வாழ வேண்டும், அன்று தான் மனிதம் மீண்டும், உயிர்ப்பித்து எழும்..என்று நாம், சினிமா மற்றும் சினிமா காரர்களுக்காக செய்யும் உதவியை போல ரோட்டில் கிடக்கும் யாருக்கேனும், செய்ததில்லை..
தன் அபிமான நடிகரின் பிறந்த நாளுக்காக ரத்தம் கொடுக்கும் நம் சமுதாயம், சாமனியரின் உயிரை காக்க வேண்டிய நேரத்தில் ரத்தம் கொடுப்பதில்லை ..தனது அரசியல் கட்சி தலைவனுக்கு பிறந்த நாளுக்கு பிரியாணி பொட்டனம் வழங்கும் நாம்..பசி என்று கேக்கும் பெரியவருக்கு பத்து ரூபாய் கூட கொடுப்பதில்லை.. இது தான் நம் சமுதாயம் நாம் மாற வேண்டும்.. இல்லை அதற்கான முயற்சியாவது செய்ய வேண்டும்..என்று எண்ணினேன்.
அவரை தூக்கி அந்த தூணில் சர்த்தினான், பேச்சு சுதாரிப்பு இல்லை, பக்கத்தில் இருக்கும் ஸ்கூல் பையனின் தண்ணீர் பாட்டிலை வாங்கி, மூஞ்சில் தண்ணீர் தெளித்தான், சுதாரித்தார்.. "தன் கை சைகையால் சாப்பாடு சாப்பாடு வேண்டும் என்றும், 2 என்றும் காண்பித்தார்.."சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு, என்பதை உணர்ந்தான்..பக்கத்து டீ கடையில் இருந்து, ஒரு டீயும் இரண்டு பன்னையும் வாங்கி வந்து கொடுத்தான்..தொண்டை அடைக்க அடைக்க உண்டார்..டீயை குடித்து முடிந்தவுடன் தன் இருக்கை கூப்பி வணங்கினார் அந்த பெரியவர், அகமது அவரின் கையை கீழிறக்கி அவரை பார்த்து புன்முறுவினான், கூட்டம் முழுவதும் அமைதியாய் அவர்களின் செயல்களை உற்று நோக்கியது, அவன் அந்த கூட்டத்தை கடந்து சென்றான்..கடந்து சென்று தனது பைக்கில் ஏறினான், தனது கை கடிகாரத்தில் மணியை பார்த்துவிட்டு, "ஐயோ, காலேஜுக்கு லேட் ஆயிடுச்சே, என்று கிக்கரை உதைத்து..இனியாவது மனிதம் மலரும் என்று எண்ணி தனது கல்லூரி நோக்கி புறப்பட்டான்..!!
பெயர்க்காரணம்
கதை நாயகனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என முகநூல் உறவுகளிடம் வினவிய பொழுது நிறைய பெயர்களை பரிந்துரை செய்தனர் ஆனால் இந்த படத்தை பார்த்த பின்பு ஒரு இஸ்லாமிய பெயர் கதைநாயகனுக்கு சூட்டலாம் என நினைத்தேன்
இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல என்பதனை மீண்டும் நிரூபிக்கவே இந்த சிறுகதையின் நாயகனுக்கு "அகமது" என பெயரிட்டுள்ளேன்..
இது நான் பிரசவிக்கும் முதல் மழலைச் சிறுகதை
இதை எழுத ஊக்கபடுத்திய எனது முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் முக்கியமாக கதைக்கரு கொடுத்து எழுதசொன்ன மேகநாதன் அண்ணனுக்கும் எனது அன்பான நன்றிகள்
கெளதம் இளங்கோ
No comments:
Post a Comment