Saturday, 17 March 2018

2018-2019 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்..!!

2018 – 19ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அரசின் மொத்த வருவாய் 1.81 லட்சம் கோடி. செலவு ரூ 2.04 கோடி ஆகும். இதனால் பட்ஜெட் பற்றாக்குறை 23 ஆயிரத்து  ரூ 176 கோடி என நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்துள்ளார்.

2018-2019 நிதியாண்டிற்கான  பட்ஜெட்டின்  முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
தமிழக அரசின் வருவாய் – செலவு
* தமிழக அரசின் வருவாய் 1.76 லட்சம் கோடி ரூபாய்
* செலவு 1.91 லட்சம் கோடி ரூபாய்
வருவாய் பற்றாக்குறை 17,490 கோடி ரூபாய்
மானியம் உதவித்தொகை 75,723 கோடி ரூபாய்
சம்பள செலவினங்களுக்கு 52,171 கோடி ரூபாய்
மத்திய வரிகளில் தமிழகத்திற்கான பங்கு ரூ.31,707 கோடியாக இருக்கும்
– 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
– பள்ளி கல்விக்கு 27,205.88 கோடி ஒதுக்கீடு
– அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு 1,750 கோடி ஒதுக்கீடு
– இடைநிலை கல்வி இயக்கத்துக்கு 850 கோடி ஒதுக்கீடு
– மாணவ, மாணவியருக்கு 1653.89 கோடி ரூபாய்.
– மடிக்கணினி வழங்க 758 கோடிரூபாய் ஒதுக்கீடு
– தமிழகத்தில் 17 மாவட்டங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது
– தூய்மை இந்தியா இயக்க திட்டத்திற்கு (ஊரகம்) 1074 கோடி ரூபாய் ஒதுக்கீடு
– உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறு வரையறை செய்த பின்னரே உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்
– உள்ளாட்சி தேர்தல் நடத்த 172.27 கோடி ஒதுக்கீடு
– வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு
– உதய் திட்டத்தால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
– தமிழக அரசிற்கு ஆயத்தீர்வை (TASMAC) மூலம் ரூ.6,998 கோடி வருவாய்
– பத்திரப்பதிவு மூலம் 10,836 கோடி ரூபாய் வருவாய்
– வாகன வரி மூலம் 6,212 கோடி வருவாய் கிடைத்துள்ளது
– மத்திய அரசின் மானியம் மூலம் 20,627 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு ரூபாய் வருவாய்
– பசுமை ஆற்றல் திட்டத்தில் 258 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

– 2018 -19க்கான பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு 11638 கோடி ஒதுக்கப்படும். மதுரை நெல்லை கோவை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும். முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.1361.60கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

– ரூ.21.43 கோடி மதிப்பில் 7000 ஏக்கரில் மரங்கள் நடப்படும். ரூ 165.68 கோடி செலவில் 2018- 2019 முதல் 2022 – 2023 வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க ஐந்தாண்டு திட்டம் செயல் படுத்தப்படும்

– விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்
– பசுமை வீடுகள் திட்டத்தில் ரூ.420 கோடியில், 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
– பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் 25 பாலங்கள் அமைக்கப்படும்
– பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.27,205.88 கோடி ஒதுக்கீடு
– ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்... பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு இணைப்புச் சாலை திட்டம்
– கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியமிக்க கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.

தாமிரபரணி – நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு 100.88 கோடி ஒதுக்கீடு
– கிண்டியில் ரூ.20 கோடியில் பசுமைப் பூங்கா தொடங்கப்படும்
– 2019 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டம்
– முதலீட்டு மானிம் 2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது
– 12,301 கோடி ரூபாயில் சென்னை சுற்றுவட்டப் பாதை மேம்படுத்தப்படும்
– நெடுஞ்சாலை துறைக்கு மொத்தமாக 11.073.66 கோடி நிதி ஒதுக்கீடு
– அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய்
– மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு 1361.60 கோடி ஒதுக்கீடு
– நாட்டிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவான மாநிலங்களில் இரண்டாவது  இடத்தில் தமிழகம் உள்ளது.

– இலவச கட்டாயக் கல்வித் திட்டத்திற்கு 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு
– குமரியில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க ஏற்பாடு
– பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 333.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு
– அணைகள் புனரமைப்புக்கு 166.08 கோடி ஒதுக்கீடு
– அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய் ஒதுககீடு. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப் படும்.

– ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி
– நிதி ஒதுக்கீடு சுகாதாரத்துறைக்கு ரூ.11,638 கோடி நிதி ஒதுக்கீடு
– மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ.10,000 இல் இருந்து 25,000 ஆக உயர்வு

– சத்துணவுத் திட்டத்துக்கு சமூக நலத்துறை வாயிலாக ரூ.5,611.62 கோடி ஒதுக்கீடு
– தரங்கம்பாடி அருகே 220 கோடி ரூபாயில் மீன் பிடி துறைமுகம்
– 2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது
– ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம்
– நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு 60.58 கோடி ஒதுக்கீடு
– 10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி
– நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை 200 கோடி ஒதுக்கீடு
– திருமண உதவி திட்டத்திற்கு 724 கோடி ஒதுக்கீடு
– சத்துணவு திட்டத்திற்கு 5,611 கோடி ஒதுக்கீடு
– 55.000 ஹெக்டேரில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி
– திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும்.

வருவாய்
-மத்திய வரிகளில் தமிழக்தின் பங்கு 31,051 கோடி ரூபாய்
-வரி அல்லாத வருவாய் 11,301 கோடி ரூபாய்
-மானியம் உதவித்  தொகைக்கு 75,723 கோடி ரூபாய்
-கடந்த ஆண்டை விட நிதிப்பற்றாக்குறை குறைவு
-மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறையான காரணிகளால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

-ஜிஎஸ்டி அறிமுகத்தால் நிச்சயமற்ற வளர்ச்சி சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக இருக்கும்.

No comments:

Post a Comment