Sunday, 4 March 2018

PETRO-DOLLAR பொருளாதாரமும் உலக அரசியலும்..

"PETRO-DOLLAR DEAL"  இது வரும் வார்த்தை அல்ல இதன் பின்பு ஒட்டுமொத்த உலக அரசியலும் பொருளாதார ஏற்றதாழ்வும் ஏன் அண்மையில் நடந்த சில பயங்கரவாத போர்களும் இதில் அடங்கும் 
அப்படி இந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது....???



பெரும்பாலும் நாம் வாங்கும் அயல்நாட்டு இறக்குமதி பொருள்கள் எல்லாம் அதன் விலையின் பணமதிப்பு டாலரில் மட்டுமே இருக்கும்
நமக்கு அந்த பொருளை ஏற்றுமதி /இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும்  அமெரிக்காவுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பின்பு பரிவர்த்தனையில் மட்டும் இது ஏன்..?


இந்தக் கேள்விக்கு விடை காணும் போதுதான்
உலகப் பொருளாதரம், ஆயுத விற்பனை,
புதிது புதிதாக ஆண்டுக்கு ஒன்றாக ரீலிசாகும் புதுப்புது வியாதிகள், பின் அந்த வியாதிகளைக் குணப்படுத்த கண்டுபிடிக்கப்படும் மருந்துகள், மருந்து கம்பேனி கார்ப்பரேட் உத்திகள், 
ஆயுத பயிற்சிகளும் ஆயுத உதவிகளும் செய்வது போல போக்குக்காட்டி தன் ஆயுதவிற்பனையில் கொடிகட்டிப்பறக்கும் போர் ஆயுத தளவாட விற்பனை ... 
இந்த விற்பனையின் பெருக்கத்தில் தற்காப்பு என்பதே அண்டை நாடுகளை எதிரிநாடுகளாக்கி தன் ஆயுதவிற்பனைக்கு அடிபணியாத மாடுகளை தீவிரவாதிகள் என்று சொல்லி 
உலக நாடுகளை ஓரளவு நம்ப வைத்து அடிமாட்டு விலைக்கு அந்த நாடுகளை கூறுபோட்டு வாங்கி ஏப்பம் விடும் பொருளாதர அடியாட்கள்.. என நம்மிடம் இருக்கும் அனைத்து கேள்விளுக்கும் கிடைக்கும் ஒற்றை பதிலாகும் 
இந்தப் பொருளாதர அடியாட்களின் சிந்தனையில் எல்லாமே அமெரிக்க டாலரின் மதிப்பில் தான் பேசப்படும், பேசப்பட வேண்டும்....

Image result for PETRO DOLLAR


டாலர் யுத்தம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இப்படித்தான் திசைமாறியது.

50 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா தன் டாலர் மதிப்பை குறையாமல் காத்துக்கொள்ள இஸ்ரெல் - அரபுநாடுகளின் சண்டையில் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா. அரபுநாடுகளுக்கு ராணுவதளவாடங்கள் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. சவுதி அரசர் குடும்பம் அமெரிக்காவின் இந்த வலையில்சிக்கிய முதல் பொன்மீன். அவர்களின் ஒப்பந்தப்படி அமெரிக்க இராணுவ தளவாடங்களை கொடுக்கும் அதற்கு மாற்றாக சௌதி அரேபியா உடன் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றியது அதில் “எல்லா நாடுகளும் சௌதியிடமிருந்து மட்டும் தான் எண்ணெய் வாங்க வேண்டும் ஆனால் அதற்கான மதிப்பை அமெரிக்க டாலரில் வழங்க வேண்டும்’’ அதன். ஒப்பந்தத்தின் பெயர் “Petro Dollar Deal’’ இப்படித்தான் பெட்ரோடாலர் பொருளாதரம் பிறக்கிறது.  ..

சவுதி அரேபியாவைப் பின்பற்றி பிற அரபு நாடுகளும் பெட்ரோடாலர் ஒப்பந்ததிற்குள் வந்துவிடுகின்றன அல்லது வர வைக்கப்படுகின்றன.

இப்படியாகத்தான் நேற்றுவரை அமெரிக்க பெட்ரோடாலர் பொருளாதரம் உலகப் பொருளாதர சந்தையில் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் வல்லரசின் சக்தியாக 
தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தது.
அதில் இரண்டு  முஸ்லீம் நாடுகள் மட்டும் உடன்படவில்லை அது ‘ஈரான் மற்றும் ஈராக் ’
அதற்கு காரணம் சதாம் உசேன் 

ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் அமெரிக்காவின் பெட்ரோடாலர் அடாவடித்தனத்தை எதிர்த்தார். அதனால் கோபமான அமெரிக்கம் இராசயண போராயுதம் இருப்பதாக ஒரு புரளியைக் கிளப்பி ஈராக்குடன் போர் புரிந்தது அதில்  அமெரிக்க வென்றதும் மீண்டும் ஈராக் பெட்ரோடாலருக்கு அடிபணிந்ததும் அனைவரும் அறிந்த செய்தி

இப்போரில் டாலர் மட்டுமே ஆயுதம். டாலர் ஆயுதம் இல்லை என்றால் நீ செத்தப் பிணம் தான். 1971 வரை நீங்கள் அமெரிக்க டாலரைக் கொடுத்தால் எப்போது வேண்டுமானாலும் அதை தங்க நாணயமாக மாற்றிக்கொள்ள முடியும்.

இம்மாதிரியான ஓர் அதீத நம்பிக்கை கொண்ட நாணய மதிப்பைக் கொடுத்து அமெரிக்கா தன் மதிப்பை உயர்த்திக்கொள்கிறது. 1971ல் பிரான்சு போன்ற நாடுகள் தங்களிடம் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க டாலருக்கு ஈடான தங்கத்தை அமெரிக்க கொடுத்திருக்கும் வாக்குறுதிபடி கேட்க ஆரம்பித்த சூழலில் அமெரிக்க பொருளாதரத்திற்கு பெரியதொரு சிக்கல் ஏற்படுகிறது. 
அவர்களிடமிருந்த தங்கத்தின் கையிருப்பு குறையும் ஆபத்து ஏற்படுவதை உணர்ந்து

தடாலடியாக அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன்
"இனிமேல் அமெரிக்க டாலரை தங்கமாக மாற்றமுடியாது" 
என்று அறிவிக்கிறார். நிக்சன் கொடுத்த இந்த டாலர் அதிர்ச்சி 
"நிக்சன் ஷாக்" நிக்சன் அதிர்ச்சி என்றே அழைக்கப்படுகிறது.
Image result for PETRO DOLLAR

தற்போது அமெரிக்காவின் பெட்ரோடாலருக்கு எதிராக சீனா பெட்ரோ யுவான் என்று தங்கள் நாட்டு பணமதிப்பில் வர்த்தகம் செய்யப்போவதாக அறிவித்து வர்த்தகத்தை ஆரம்பித்தும் விட்டது. அதிலும் குறிப்பாக ரஷ்யநாடுகளிடமிருந்து பெட்ரோல் வாங்குகிறது தங்கள் கரன்சியான யுவான் மதிப்பில். அரபுநாடுகளிடமும் தன் பெட்ரோயுவான் வர்த்தகத்தை பேச ஆரம்பித்துவிட்டது சீனா.. 
இதனால் ரஷ்யாவை திவிரவாத குற்றம் சாற்றி தனிமைப்படுத்தி அதன் மேல் பொருளாதார தடை விதிக்க திட்டமிட்டது அமெரிக்கா..
ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல ஏனென்றால் அந்த நேரத்தில் இரஷ்யால இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு 
(Natural Gas) ஏற்றுமதி நடைபெற்றது.. இரஷ்யா மேல் பொருளாதார தடை விதித்தால் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக நிற்கும் நிலை வரலாம் என்று அந்த திட்டத்தை கைவிட்டது அமெரிக்கா
அதன் பின்னா மற்றுமொரு இஸ்லாமிய நாடான ‘கத்தார்’ நாட்டில் இருந்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுகளை பெறுவதாக அமெரிக்கா ஒப்பந்தம் போட்டது ஆனால் அதிலும் ஒரு சிக்கல் எனென்றால் கத்தாரிலுருந்து வரும் அந்த பெட்ரொலிய குழாய் “சிரியா” வழியாக தான் அமெரிக்கா செல்லவேண்டும்..இதனால் சிரியா மீது போர்தொடுத்து தனது காரியத்தை சாதிக்க நினைக்கிறது அமேரிக்கா
(இப்போது விளங்குகிறதா..?? சிரியா நாட்டு போருக்கு யார் காரணம் என்று.)
ஆனால் அமேரிக்கா மீது பழி வந்துவிடக்கூடாது என்பதால் அதனை உள்நாட்டு முஸ்லிம் பிரிவினரிடையே (சியா மற்றும் சன்னி ) கலவரம் என்றும்... அதற்க்கு துணை நிற்ப்பது ரஷ்யா என்றும் தனக்கு சொந்தமான ஊடகங்கள் மூலம்  பரப்புரை செய்கிறது அமெரிக்கா.

இதுவரை பெட்ரோல் டீசல் எண்ணெய் வளங்களின் விற்பனை அமெரிக்க டாலரில் மட்டும் தான் நடந்தாக வேண்டும் அதை மீறினால் என்ன நடக்கும் தெரியுமா..??
நீ தீவிரவாதி,உன் நாட்டு மக்கள் தீவிரவாதிகள்,உனக்கு கொடுக்கப்பட்ட எல்லா உதவிகளும்  இனி நிறுத்தப்படும், ஏன் உன் நாட்டு மக்கள் எங்க அமெரிக்காவுக்கு வந்தா அவன் தீவிரவாதினு சொல்லி திருப்பி அனுப்புவேன்..நான் நினைச்சா என்ன வேணும்னா செய்வேன்.. அய்யோ அய்யோ.."

பெட்ரோ டாலரின் முதலாளியான அமெரிக்காவின்  அலறல் ஆரம்பித்துவிட்டது.

ஆனால் இந்த அலறல்களுக்கு சீனாவின் நெடுஞ்சவர் எந்த ஓர் அசைவையும் காட்டாமல் குண்டூசி அழிப்பான் ரப்பர் முதல் அன்றாட மின்பொருள் சாதனங்கள்  வரை சீனாமேக்கிங்க் என்று உலகச்சந்தையில் கடைவிரித்திருக்கிறது.


இந்த பொருளாதார யுத்தத்தில்  இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது
என்பது பரமரகசியம்...!



ஏனென்றால் இந்திய ரூபாய் தாளில் அச்சிடப்பட்டிருக்கும்
"I PROMISE TO PAY YOU THE BEARER THE SUM OF ... RUPESS"
என்று சொல்லப்பட்டிருக்கும் சத்தியவாக்குமூலத்தை 
உலகநாடுகள் நம்பத்தயாராக இல்லை! 
அதனால் "பெட்ரோ ரூபாய்" னு சீனாவுக்கு எதிராக ஒரு பேச்சுக்கு கூட நம்ம ஆட்களால் பேசவே முடியாது.

கெளதம் இளங்கோ


4 comments:

  1. சிறப்பு தம்பி பயணம் சிறக்கட்டும்..ஏகாதிபத்தியத்தியயதயத்திதின் ஏஏவள்களை கூறியதா பதிவு அருமை

    ReplyDelete
  2. தெரியாத யாருக்கேனும் பகிருங்கள் அண்ணா....

    ReplyDelete