Friday, 4 July 2014

தமிழ் மேல் காதல்

இதோ என்றும்போல இன்றும் கதிரவன்
துயிலெழுந்துவிட்டான்
இனியெல்லோரும் எறும்புக்கூட்டமாக‌
கொத்துக் கொத்தாக அலைவார்கள்.

நானும் தான் அலைகிறேன் எனது
வாழ்வாதாரமான வேலைக்காக‌,
பட்டம் பெற்ற பின்பும் அப்பாவின்
காசிலமர்ந்து சாப்பிடும்
நிலைக்குள்ளானவன் நான்.

காலம் இப்படியோடிக்கொண்டிருக்க‌
என் மனமோ காதல் வயப்பட்டுவிட்டது,
ஆம் நானும் காதலில் விழுந்துவிட்டேன்,

கவிதைகளேனும் எழுதிப் பிழைத்துக்
கொள்வோமென‌
காதல் வயப்பட்டுவிட்டேன்
"எனது தமிழ் மொழி"யின் மேல்.
இனி தமிழ் எனக்கு சோறுபோடும்.

No comments:

Post a Comment