Wednesday, 28 February 2018

சிறுவயதில் சிவராத்திரி

சிறுவயதில் சிவராத்திரி..!
(வல்லம்)
5 ஆம் வகுப்பு முடிந்து அரைக்கால் டவுசரில் இருந்து முழுடவுசருக்கு மாறிய தருணம்.
பள்ளிக்கு மிக அருகில் வீடு என்பதால் பெரும்பாலும் மதிய சாப்பாடு வீட்டில்தான் 
12.30 மணி (சோத்துமணி) அடிச்சதும் எல்லாரும் தட்ட தூக்கிட்டு சத்துணவுக்கு ஓடுவாங்க நான் வீட்டுக்கு ஓடுவேன் (ஏன்னா அப்பத்தாவுக்கும் சத்துணவு முருகேசனின் மனைவிக்கும் போன வாரம் சண்டை.. அதானல அங்க சாப்டாதானு அப்பத்தா ஆர்டர்)
அதானல வீட்டுக்கு வந்தேன் அம்மா ஏதோ மாவு கலந்துட்ருந்தாங்க ரைட்டு இன்னிக்கு வீட்ல ஏதோ பலகாரம் போல சாயந்திரம் விசுவா அண்ணன் டியுசன் முடிஞ்சதும் வந்து ஒரு புடி புடிச்சிரலாம்னு நினச்சிட்டே சாப்டுட்டு மீண்டும் பள்ளிக்கு போயிட்டேன்..4 மணிக்கு பள்ளி முடுஞ்சதும் நானும் ஶ்ரீதரும் சைக்கில்ல போயி பூமி மாமா கடையில ஸ்டிக்கர் சொரண்டினா பரிசுப்பொருள் விழும் அத வாங்கி ஒன்னும் கிடைக்காத விரக்தில டியுசனுக்கு போயிட்டோம் 7 மணிக்கு டியுசன் முடிஞ்சு பலகாரம் 
 சாப்டலாம் னு வீட்டுக்கு போனா அம்மா அப்பத்தா சித்தி யாரையுமே காணோம் தாத்தா மட்டும் உக்காந்து 7 மணி சன்நியுஸ் பாத்துட்ருந்தாரு.. கொஞ்ச நேரம் கழிச்சு ஜெயந்திரா அக்கா கோலங்கள் நாடகம் பாக்க வந்துச்சு.. அக்கா அம்மா அப்பத்தா எல்லாரும் எங்கனு கேட்டேன் எல்லாரும் வசந்நா அத்தை வீட்டுல சிவராத்திரி சாமி கும்புட்றாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க... உனக்கு வேணும்னா தோசை போட்டு தரேன் சாப்பிட்டு படி.. அவங்க வர்றவருக்கும்னு சொல்லுச்சு. சரி இப்போதைக்கு தோசையா சப்புடுவோம் அப்பறமா பலகாரத்த சாப்டுவோம்னு சாப்பிட்டேன்.. கை கழுவிட்டு வர்றதுக்குள்ள அம்மா அப்பத்தா கவிதா சித்தி அனுசியா சித்தி எல்லாரும் வந்துட்டாங்க ரைட்டு அடுத்த ரவுண்டுக்கு பலகாரம் வந்துருச்சுனு நினச்சா சித்தி அத மறச்சு மறச்சு கொண்டுபோச்சு சித்தி அதுஎன்னனு கேட்டேன் அது சாமி கும்பிட்ட பலாகரம்டா.. எனக்கு குடுக்காம கொண்டு போற.. உடனே அப்பத்தா அடியே அவனுக்கு ரெண்டு எடுத்துக் குடுங்கடினு சொல்ல இல்ல குடுத்தா அக்கா திட்டும் அம்மாயினு சித்தி அந்த தூக்குசட்டிய கொண்டுட்டு உள்ள போயிருச்சு உடனே எனக்கு அந்த பலகாரம் வேனும்னு கத்தி கதறி கீழ விழுந்து உருண்டு பெரண்டு அழுது அம்மா வந்து ஒரு கொட்டு வச்சதுக்கு அப்பறம்தான் ஒரு நிலைக்கு வந்தேன்... அதற்கப்றம் எத்தனையோ சிவராத்திரி கடந்துவிட்டது ஆனா அந்த தூக்குசட்டிக்குள்ள என்ன பலகாரம் இருக்குனு இப்ப வரைக்கும் தெரிஞ்சுக்க முடியல...!
இன்னிக்கும் கிச்சனுக்குள்ள அந்த தூக்குசட்டி இருக்கு அதுக்குள்ள என்ன பலகாரம் இருக்குனு பாக்க ஆசைதான் ஆனா அம்மா திட்டுவாங்க அதனால வேண்டாம்..! 
அம்மா இன்னொரு சப்பாத்தி போடுங்க போதும்..!!

அந்த சிவராத்திரி சாமி கும்பிட்ட பலகாரத்த ஆம்பளைங்க சாப்பிடக்கூடாதாம்...!

#சிறுவயது_நினைவலைகள்

No comments:

Post a Comment