Sunday, 17 September 2017

பெரியாரும் நாமும்...!


எல்லோருக்கும் தெரிந்தது தான்,பெரியாரை கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பனத்தனத்தின் எதிர்ப்பாளராகவுமே பார்க்க வைத்து அவரது பல சிந்தனைகளை புதைக்கும் செயலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், இந்த தாடிக்கார கிழவன் எதை பற்றி தான் சிந்திக்கவில்லை / எதை பற்றி தான் கருத்துக்களை சொல்லவில்லையென யோசித்து பார்த்தால் ஆச்சரியத்தை விட அதிர்ச்சி தான் மிஞ்சுகிறது. 






நவீன விவசாயம், பசிக்கு மருந்து, மாற்று உணவு, கர்ப்பத்தடை, குடும்பக்கட்டுப்பாடு, திராவிடம், தேசியம், கல்வி, மறுமணம், பரீட்சை, வர்ணாசிரமம், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், சாதி, சட்டம், ஒழுக்கம், மூடநம்பிக்கை, முட்டாள்தனம் என எல்லா இடத்திலும் எல்லா களத்திலும் நம்மை தற்காத்துக்கொள்ள ஆயுதங்களை விட்டு சென்றிருக்கிறார் பெரியார். 

இன்றைய தேதியில், மதவெறியும், போலியான தேச பக்தியும் நம்மை கட்டியணைக்க வரும் வேளையில், இந்த கருப்பு சட்டை கிழவனின் கைத்தடியை கடன் வாங்கித்தான் அவைகளை அடித்து விரட்ட வேண்டும். 

பெரியாரின் ஒட்டு மொத்த சிந்தனைகளையெல்லாம் ஒரு சிறு பதிவில் அடக்கிவிட முடியாது. ஆனால் கடல் நீரை கையளவு கிண்ணத்தில் அள்ளி வந்தாலும், அது அதே கடல் நீர் தானே.

இன்றைய நாட்டு நடப்புக்கு பொருத்தமான பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை மட்டும் இங்க பதிவிடுகிறேன். இதை பதிவிடும் நோக்கம் ஒன்றே ஒன்று தான்; தயவு செய்து அவரின் கருத்துக்களை படியுங்கள், பின்பற்ற வேண்டுமென்று அவசியமெல்லாம் இல்லை, ஆனா படியுங்கள், ஏனெனில், 'நான் சொல்கிறேன் என்பதற்காக நான் சொன்ன எல்லாவற்றையும் நம்ப வேண்டாம்' என சொன்ன ஒரே சிந்தனைவாதி தந்தை பெரியார் மட்டும் தான்.

பெரியார் இதில் பல கருத்துக்களையும் கேள்விகளையும் எழுப்பி 70-80 வருஷங்கள் முடிந்து விட்டன. இது தான் அவர் காலங்கள் தாண்டி வாழும் சிந்தனையாளர் என்றும், நம் காலம் முடியும் வரை அந்த கிழவனின் கரம் பிடித்து நடக்க வேண்டும் என்றும் நம்மை தெளிய வைக்கும் காரணி.

இது மாட்டுக்கறிக்கு:
பூச்சிகளையும் புழுக்களையும் அழுக்குகளையும் மலத்தையும் சாப்பிடும் கோழியையும் மீனையும் மனிதர்கள் சாப்பிடும் போது, புல்லும் புண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் சாப்பிடும் மாட்டின் இறைச்சியை ஏன் சாப்பிடக்கூடாது?

இது ஜல்லிக்கட்டுக்கு:
தமிழன் தன்னை இந்தியன் என நினைத்ததால் தமிழர் வீரத்தையும் கலையையும் பண்பாட்டையும் இழந்தான்; தமிழன் தன்னை இந்து என கருதியதால் மானத்தையும் ஞானத்தையும் உரிமையையும் இழந்தான்.

இது Demonetisationக்கு:
படிப்பு வேறு அறிவு வேறு என்பதை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள், படித்த முட்டாள்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். பெரும் தவறு செய்பவர்கள் எல்லோருமே படித்த மூடர்களாய் தான் இருப்பார்கள். 

இது Anit-Indianக்கு:
......... இந்த லட்சணத்தில் கல்வியோடு இப்ப தேசபக்தியும் புகட்டப்படுகிறது. இது அறிவு வளர்ச்சிக்கு ஆபத்தான காரியமாகும். கடவுள் பக்தி மத பக்தி போலவே இந்த தேசபக்தியும் மனிதர்களின் அறிவு வளர்ச்சியை நாசமாக்கி விடுகிறது. அதிலும் நமது நாட்டு தேசபக்தி நினைப்பதற்க்கே பயங்கரமா இருக்கிறது. இது பழைமையை பேசி பின்னாள் போக பார்க்கிறதே தவிர முன்புறம் பார்ப்பதில்லை.

காதல்:
காதலும் அன்பும் ஒருவரிடம் மட்டும் தான் இருக்கவேண்டும் என சொல்வது முரண்பாடான ஒன்று. காதல் என்பது மிக மிக அற்பமான சாதாரண விஷயம், காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்கு சிறிதும் பொருந்தாது. ( இதை சொன்ன வருஷம் 1940, நவம்பர் )

Media:
உலகில் பத்திரிக்கைகள் 2 விதமானவை, மக்கள் வாழ்க்கையை முன்னேற்ற நடத்தப்படுபவை, தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள நடத்தப்படுபவை. நாட்டில் காலிகள் அயோக்கியர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றால், அவர்களை சார்ந்திருக்கும் பத்திரிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ ஸ்ட்ரைக்:
தொழிலாளிக்கு எவ்வளவு கூலி தரலாம் என விவாதிக்க தான் அரசியல் திட்டத்தில் கொள்கையாக இருக்கிறதே தவிர, ஒரு முதலாளி இவ்வளவுக்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என ஏதாவது கொள்கையோ திட்டமோ இருக்கா?

No comments:

நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மையெல்லாம் அநேகமாக செத்துப்போனவர்களிடம் தானே தவிர உயிரோடு இருப்பவர்களிடம் இல்லை.

Exam:
உருப்போட்டு ஒப்புவிப்பது என்பதே எந்த படிப்புக்கும் பரிட்சையாக இருக்கக்கூடாது. அப்படியானால் அர்ச்சகனும் புரோகிதனுமே ஒப்புவிக்க முடியும். உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில் தான் பரீட்சிக்கப்பட வேண்டுமே தவிர, ஒவ்வொரு வருடமும் தேர்ச்சிக்காக பரீட்சிக்க கூடாது.

சினிமா:
நம்ம பெண்கள் அலங்கார பொம்மைகளாகவும், ஆண்களின் கண்களுக்கு விருந்தானத்திற்கும் முக்கிய காரணம் இந்த பாழாய் போன ஒழுக்கமற்ற சினிமா படங்களே ஆகும்.

கூவாத்தூர் ரிசார்ட்:

ஸ்தல ஸ்தாபனங்களில், சட்ட சபைகளிலும், பாராளுமன்றத்திலும், மற்ற இடங்களிலும் நமது மக்கள் பிரதிநிதிகள் நடந்துக்கொள்ளும் தன்மைகளை பார்த்தால் நமது ஜனநாயகத்தின் யோக்கியதை விளங்கவில்லையா?

நாத்திகன்:
நாத்திகன் என்பவன் கடவும் இல்லை என்பவன் என்று அர்த்தம் கிடையாது. புராண, இதிகாச, வேத சாத்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களே, அவற்றை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்ப்பவர்களே நாத்திகர்.

டிவி விளம்பரங்கள்:
பெண்கள் நகைகளின் மேலும் சேலைகள் மீதும் பிரியத்தை ஒழியுங்கள். இவற்றில் பிரியம் வைத்தால் ஜவுளிக்கடைகளின் அலங்காரத்திற்கு தினம் தினம் புது சேலைகள் மாற்றி நிறுத்திவைக்கப்படும் பொம்மைகள் போலத்தான் மதிக்கப்படுவீர்கள்.

பசுவதை:
இந்துக்கள் தான் பசு விஷயத்தில் மோசமாக நடந்துக்கொள்கிறார்கள். வண்டியிலும் ஏரிலும் செக்கில் பூட்டி இழுத்து அது சாகும் வரை உபத்திரவிக்கிறார்கள். பருவத்தில் காளைகளை கட்டிப்போட்டு விதர்களை நசுக்குகிறார்கள். பாலை கன்றுக்கு கொடுக்காமல், புல்லை போட்டுவிட்டு பாலை தாங்கள் குடிக்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள்.

காதல் கல்யாணம்:
வாழ்க்கை துணை விஷயத்தில் காதல் மட்டும் போதாது. அறிவு அன்பு கல்வி பொருத்தம் வேலை அனுபவமெல்லாம் வேண்டும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருந்தது என்றால், அப்போதைய அறிவுக்கு அது போதும்.

பாபா ராம் ரஹீம் வகையறா:
கடவுள் தன்மை என்பது அயோக்கியத்தன்மைகள் தஞ்சமடைய பாதுகாப்பான இடமாகி விட்டது. அவர்களுக்கு தண்டனை என்பதும் சிறைச்சாலை என்பதும் காலிகள் உடலை இளைப்பாறி உடலை தேற்றிக்கொண்டு வரும் இடமாகி விட்டது.

வாமன ஜெயந்தி வாழ்த்துறவங்களுக்கு:
மாற்றான் பெண்களிடம் கிருஷ்ணன் செய்த லீலையை பற்றி வாய் பிளந்து பேசி கை தட்டி கேட்பவன், தனது வீட்டிலே கிருஷ்ணனை அதே லீலைகளை நடத்த விடுவானா?

பெரியார் கருத்துக்கள் இந்த காலகட்டத்திற்கு உதவாது என்ற கிச்சாவுக்கு சொல்லியிருக்கார்:
பழைய அபிப்ராயங்கள் எல்லாம், அது எதுவானாலும் பரிசோதனை செய்யப்படலாம். அப்படி பரிசோரிப்பது நடுநிலையில் தவறாமல் இருந்தால் வேண்டும். பரிசோதிக்க வேண்டுமென பேசிவிட்டு பின்வாங்குபவன் யாராயிருந்தாலும் கோழையாவான்.

இன்னமும் நமக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தேவையான சிந்தனைகளையும் நாம் கேட்கவேண்டிய கேள்விகளையும் நூறாண்டுகளுக்கு முன்பே போதித்து போய் விட்டான் இந்த சுயமரியாதை சித்தன். மோடியை நினைக்கும் போது இந்த தாடியையும் நினைக்க வேண்டுமென அதே நாளில் அவருக்கே முன்பே பிறந்திருக்கிறான் இந்த கிழவாடி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ;-) :-)

சித்தர்களுக்கு சாவில்லையென்று கதையடிப்பார்கள். அது உண்மையாகவே இருக்கட்டும், பெரியார் என்னளவில் சித்தர் தான். சுயமரியாதை சித்தர் எனலாம். 

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே" என்று ஒரு சித்தரே பாடிய பாடல் உண்டு.

யோகமும் தியானமும் செய்து சைவம் பழகி 70 வயதில் இறந்த ரமணர் பலருக்கு மகரிஷி என்றால், அதற்கு மேலும் முப்பது வருடங்கள் மூத்திர பையை சுமந்துக்கொண்டு இந்த தமிழ் மக்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனை முன்னேற்றத்திற்கு ஓயாது உழைத்தவன் எனக்கு மகாமகாரிஷி.

தமிழ் அழியும் வரை பெரியார் சிந்தனைகள் வாழும், பெரியாரின் சிந்தனைகள் அழியும் போது தமிழர் அழிந்திருப்பர்.

Saturday, 9 September 2017

முதல் இடை கடை சங்கங்களும் தமிழர்களும்...!

பழங்கால மரபிலக்கியப் படி, பாண்டிய மன்னர்கள் சங்கங்கள் தோற்றுவித்து தமிழ் மொழியை வளர்த்தார்கள். கூடவே, தமிழ் மொழி புலமையையும், தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிகளையும் போற்றினார்கள். பண்டைய தமிழர்களின் அக புற ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள், ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் ஆகியவற்றிற்கு சான்றாக விளங்குவதே சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களே!
அச் சங்கங்களை மூன்று வகையாக தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என பிரித்தனர்.

அவ்வகை சங்கங்களைப் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் விரிவாக காண்போம்



#முதல்_தமிழ்ச்சங்கம்

(தலைச்சங்கம் அல்லது முதல் சங்கம்) கி.மு. 5000 – கி.மு. 3000 வரை.

பழம்பாண்டியமன்னனான “காய் சினவழதி” என்பவனால் முதல் சங்கம் நிறுவப்பட்டது.
பழம் பாண்டி நாட்டின் தலைநகராக குமரியாற்றங்கரையில் வீற்றிருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். மன்னன் காய்சினவழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை, 89 பாண்டிய மன்னர்கள் அச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தமிழை ஆய்தனர். அவர்களின் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார் தென்மதுரையை தலைநகராகக் கொண்டு முதல் சங்கம் கி.மு. 5000 முதல் கி.மு. 3000 வரை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புடன் வளர்ச்சி பெற்று வந்துதது.

அக்காலத்தில் ஈழம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பக்றுளியாற்றிற்கும் குமரிக்கோட்டிற்கும் இடையே இருந்த பெரும் நிலப்பகுதியே பழம் பாண்டிய நாடு. இதன் தலைநகர் தென்மதுரை. ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள், மலைகள், ஆறுகள், காடுகள் கொண்ட நாடு பாண்டிய நாடு என அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.

திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது எனப் பேராசிரியர் ஹெக்கல் கூறுகிறார்.


சங்கத்தின் பெயர்: தலைச் சங்கம் அல்லது முதல் சங்கம்

நிறுவனர்: அகத்திய முனிவர்

தலைவர்: விரிசடைக் கடவுள்

அமைவிடம்: தென் மதுரை

தென் மதுரை பற்றிய ஒரு சிறு குறிப்பு: கடலுக்குள் மூழ்கி போன குமரி கண்டத்தில் (இலமோரியா கண்டம் ) அமையப் பெற்ற இந்த மாநகரம் தென் மதுரையானது, பாண்டிய அரசர்களின் முதல் தலை நகரம் ஆகும்.

தொடக்கம்: கி.மு. 9000 (நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது)

ஆயுள் காலம்: 4400 ஆண்டுகள்

புலவர்களின் எண்ணிக்கை: 4449

பின்பற்றப்பட்ட இலக்கண நூல்: அகத்தியம்

படைக்கக்பெற்ற நூல்கள்: பரிபாடல், முதுநாரை’, முதுகுருகு, களரியாவிரை

ஆண்ட அரசர்கள்: 89 பேர்; ‘காய்சின வழுதி’ முதல் ‘கடுங்கோன்’ வரை

ஆறு: பஃறுளி ஆறு

மலைத் தொடர்: பன்மலை அடுக்கு

ஆதாரங்கள்: தலைச்சங்கம் பற்றிய ஆதாரங்கள் அனைத்தும் கி.மு. 2387 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட கடற்கோளாறினால் அழிந்திருக்கும் என்பதே வருந்தத்தக்க செய்தியாகும். 


#இடைச்சங்கம் (இரண்டாம் தமிழ்ச்சங்கம்) 
கி.மு.9000 முதல் கி.மு 4600 வரை
முதல் சங்கமிருந்த தென்மதுரை அழிந்து போகவே மீண்டும் சங்கத்தை உருவாக்க எண்ணிய “பாண்டிய மன்னன் கடுங்கோன்” என்பவன் கபாடபுரத்தை அமைத்து அதில் இடைச்சங்கத்தை நிறுவி தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தான்.
இச்சங்கம் சுமார் கி.மு.4600 முதல் கி.மு 900 வரை ஏறக்குறைய 3700 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது.

இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர்.
இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது.

மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திழ்ந்தது.

“இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்
ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்
கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்”
என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியை சுட்டிக் காட்டுகிறது.

இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அவைகள் பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுனுக்கம், தொல்காப்பியம் போன்றவைகளாம். இதில் தொல்காப்பியம் தலைசிறந்த நூலாகப் போற்றப்பட்டது.

கி.மு.900 அளவில் ஏற்பட்ட கடற்கோளானது கபாடபுரம் இருந்த பகுதி முழுவதையும் அழிந்து விட்டது. கடற்கோளால் பாண்டிய நாட்டையும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தையும் இழந்ததோடு இடைச்சங்கம் இலக்கியங்களையும் இழக்க நேரிட்டது...!!


சங்கத்தின் பெயர்: இடைச் சங்கம்

அமைவிடம்: கபாடபுரம்

கபாடபுரம் பற்றிய ஒரு சிறு குறிப்பு : கபாடபுரம் பாண்டிய மன்னர்களின் இரண்டாவது தலை நகரம் ஆகும். இந்த நகரமும் கடலுக்குள் மூழ்கி போன குமரி கண்டத்திலே தான் அமைந்து இருந்தது.

தொடக்கம்: கி.மு. 4600 ( நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது )

ஆயுள் காலம்: 3700 ஆண்டுகள்

புலவர்களின் எண்ணிக்கை: 3700

பின்பற்றப்பட்ட இலக்கண நூல்கள்: அகத்தியம், பூதப்புராணம், இசை நுணுக்கம், மாபுராணம், தொல்காப்பியம்.

படைக்கக்பெற்ற நூல்கள்: கலி, குருகு, வெண்டளை, வியாளமலை அகவல்.

ஆண்ட அரசர்கள்: 59 பேர் ; ‘வெண்தேர் செழியன்’ முதல் ‘முட்டதுத் திருமாறன்’ வரை

ஆதாரங்கள்:
இந்த சங்கம் இருந்தமைக்கு ஆதாரங்கள், வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அர்த்தசாத்திரம் நூலில் கௌடில்ய மகரிஷியும் இதை பற்றி எழுதி உள்ளார். இச் சங்கம் மூன்றாம் கடற்கோளால் அழிந்தது. தொல்க்காப்பியத்தை தவிர ஏனைய நூல்கள் அனைத்தும் அழிந்தன.




#கடைச்சங்கம்

கடைச்சங்கம் அல்லது மூன்றாம் தமிழ்ச்சங்கம். கி.மு900முதல் கி.பி. 250 வரை

கபாடபுரம் அழிவுற்ற அதேவேளை இடைச்சங்கமும் சேர்ந்தே அழிவுற்றது. அழிவுற்ற பாண்டி நாட்டையும் தமிழ் சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முட்டத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உருவாக்கி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை நிறுவினான்.

இப்பொழுது உள்ள மதுரையில் கடைச்சங்கம் நிலைப்பெற்றிருந்தது என இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது.

இச்சங்கத்தைப்பற்றி செய்திகள் நமக்கு நிறையக் கிடைத்துள்ளன. கடைச்சங்கத்தில் 49 அவைப் புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். அவர்கள் நக்கீரன், நல்லந்துவனார், சீத்தலைச்சாத்தனார் போன்றவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவார். கபிலர், பரணம் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்ககாலத்தவர்களே.இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே.

கடைச் சங்கத்தின் சிறப்புகள்
பழைய திருவிளையாடற் புராணத்தின் வாயிலாக சங்கப் பலகை என்று ஒன்று இருந்த செய்திகளை அறியமுடிகிறது. “மொழியறி சங்கப் பலகை” என்றும் “பாவறி சங்கப்பலகை என்றும்” இருவகை சங்கப்பலகைகள் இருந்ததாக நமக்குத் தெரிவிக்கின்றது. பாடிக்கொண்டிருக்கும் பாடலை சங்க பலகை ஏற்றால்தான் புலவர் பெருமக்கள் அப்பாக்களைப் போற்றுவார்களாம்.

பிற்கால பாண்டிய மன்னன் ஒருவன் கடைச்சங்கத்திலிருந்த நாற்பத்தொன்பது புலவர்களின் உருவங்களை சிலைகளாகச் செய்து நிறுவினானாம். ஒரு சமயம் பொய்யாமொழிப் புலவர் அச்சிலைகள் முன் நின்று பாடினாராம். அவர் பாட்டைக் கேட்டு ரசித்த அப்பதுமைகள் தலையசைத்ததாகப் பழஞ்செய்தி கூறுகின்றது.

கடைச்சங்கத்தின் அழிவு:
சிறந்து விளங்கிய கடைச் சங்கமாது பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதியின் காலத்திற்குப்பின் நில்லாது மறைந்தொழிந்தது. அவனுப்பின் வந்த பாண்டியர்கள் சங்கம் நிறுவாது, தமிழை வளர்க்காது போயினர். காரணம், அரசியல் குழப்பங்கள் பல நிகழ்ந்தன. களப்பியர்களின் படையெடுப்புகள், பல்லவர்களின் படையெடுப்புக்கள், பாண்டிய நாட்டில் பதிமூன்று ஆண்டுகள் கடும் பஞ்சம் காரணமாக சங்கப் புலவர்களைப் பாதுகாக்க முடியாமற்போகவே அவர்கள் சேர, சோழ நாடு நோக்கிச் சென்று விட்டனர். இச் சூழ்நிலையில் கி.பி.300 ஆம் ஆண்டுகளின் இறுதியில் சங்கம் அழிவுற்றது என இறையனார் அகப்பொருளுரை தெரிவிக்கிறது.


சங்கத்தின் பெயர்: கடைச்சங்கம் (அ) மூன்றாம் தமிழ்ச்சங்கம்.

நிறுவனர்: பாண்டியன் முட்டதுத் திருமாறன்

அமைவிடம்: மதுரை ( வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தற்போதைய மதுரை மாநகர் )

தொடக்கம்: கி.மு. 900 ( நக்கீரனாரால் கணிக்கப் பெற்றது )

ஆயுள் காலம்: 1150 ஆண்டுகள்

புலவர்களின் எண்ணிக்கை: 449

பின்பற்றப்பட்ட இலக்கண நூல்கள்: அகத்தியம், தொல்காப்பியம்

படைக்கக்பெற்ற நூல்கள்: குறுந்தொகை, நெடுந்தொகை, குறுந்தொகை நானூறு, நற்றினை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலி பரிபாடல், குத்து, வரி, சிற்றிசை, பேரிசை, திருக்குறள்

ஆண்ட அரசர்கள்: 49 பேர். ‘முட்டதுத் திருமாறன்’ முதல் ‘உக்கிர பெருவழுதி’ வரை.

முட்டதுத் திருமாறன் கபாடபுரம் விட்டு வெளியேறி மதுரையில் ஆட்சி அமைத்தான்.

ஆதாரங்கள்:
கடைச் சங்கத்தைப் பற்றி பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்ட சின்னமனூர் கல்வெட்டு தான், தொல்லியல் துறைக்கு கிடைத்த முதல் ஆதாரம் ஆகும்.



#நான்காம்_தமிழ்ச்சங்கம்

முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழிவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்கச் செயல்இழந்து விட்டது. 

பண்டைய நாளில் தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய மதுரை கொடைவள்ளல்
திரு.பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் சில தமிழறிஞர்கள் உதவியால் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார்..!

மெய் இல்லாமல் மெய்ப்பிக்கும் தமிழ்..!


எனன பாவம செயததோ
இநத எழததுககள
திருமணம ஆகாமலே
இபபடி மெயயினறி
விதவைகளாகி நிறகினறன..!!

தமிழ மொழி கொணட
பெருமை சொலலவே,
மெயயிலலாமல
பொயயாக நிறகினறன
இநத எழுததுககள...!!

எநத மொழியும
எதிர காணாத பெருமை
எஙகள தாய தமிழுககு உணடு,
இது வெறும பேசசு மொழியலல,
உயிரின மூசசு மொழி...!!

உலகின மிக சிறநத
பேரழகி எஙகள தமிழ மொழி,
உசசரிககும போதே
நாவில எசசில ஊறும
தேனினும இனிய மொழி..!!

எழுதது பிழை இருநதாலும,
அழகில குறை சூழநதாலும
தனிததுவம வாயநது
தடம பதிபபது
எஙகள ஆதிகால தமிழ...!!

இஙகே தமிழ மொழியின
விநதை எனபது
மெயயெழுததிலலாமல
உயிரமெயயெழுததை
வாசிகக முடியும எனபதே...!!

ஒரு தமிழனால இதை
நிசசயமாக சரியாக
படிகக முடியும
எனற கரவததினால தான
தமிழ மொழி பெருமையை
உரககச சொலகிறேன..!!


கெளதம் இளங்கோ

#தமிழறிவோம்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே...!!!



உலகப்போர் அழிவு பீதியில் சர்வதேசம் : மீண்டும் உலகை ஆளக் காத்திருக்கும் தமிழர்கள்!

நாளைய தினமே மூன்றாம் உலகப்போர் ஏற்படப்போகும் என்ற நிலை ஏற்பட்டதோடு, சர்வதேசமே அதனை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கின்றது.

போர் அறைகூவல்கள் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் விடுக்கப்பட உலகப்போருக்கான சாத்தியம் வலுப்பெற்று, உலக அழிவையும் காட்டிவிடும் ஒரு வகை பீதி கண் முன் நகர்கின்றது.

அதேபோல் இந்த உலக யுத்தத்தை பற்றி பல தீர்க்க தரிசனங்கள் கூறப்பட்டுள்ளதால் உலகம் ஒரு வித பதற்றத்திலேயே நாட்களைக் கடத்துகின்றது.

இது இவ்வாறு இருக்க, நவீன உலகின் நடைமுறைப் பாதை மறைவாகக் கொடுக்கும் ஓர் செய்தி என்ன வெனின் தமிழர் மீண்டும் உலகை ஆளப்போகின்றார்கள் என்பதே.

அழிக்கப்பட்டு, அடக்கப்பட்டு தொடர்ச்சியாக அடிமைப்படுத்த பலராலும் திட்டமிட்டு வரும் ஓர் இனம் எப்படி மீண்டும் உலகை ஆளும் என்பது இப்போதைக்கு வேடிக்கையான விடயமாக இருக்கலாம்.

ஆனால் இதற்கான நம்பிக்கையைக் கொடுத்து வருகின்றது தமிழரின் எழுச்சி. தமிழர் ஒரு காலத்தில் இந்த உலகை ஆண்டனர் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.

இருப்பாய் தமிழா நெருப்பாய்! 
குட்டக் குட்ட நீ குனிந்தால்குட்டிக் கொண்டேயிருக்கும் இவ்வுலகம் ..... 
என அறிந்ததாலோ என்னவோ இப்போது மீண்டும் ஒன்றுபட்டு விட்டான்.
இந்த வரிகளை சாத்தியப் படுத்துகின்றது இன்றைய தமிழரின் ஒன்று கூடல்.

சரி அது எப்படி முழு உலகையும் தமிழன் மீண்டும் ஆளுவான் என்று கூறமுடியும். எப்படி சாத்தியம்? என்ற கேள்வியோ? அல்லது சந்தேகமோ வேண்டாம். இதற்கு காரணம் இருக்கின்றது.

அதாவது, இப்போதைக்கு வடகொரியாதான் அமெரிக்காவிற்கு எதிரி என்பது வெளிப்படையாக தெரிந்த விடயம். ஆனால் ஒட்டு மொத்த உலகிற்குமே தமிழர்கள் பிரதான எதிரிகள்.

சட்டென்று மேலோட்டமாக தெரியாத விடயம் இது. இலங்கை யுத்தத்தை சற்று நிலை நிறுத்திப் பாருங்கள். தமிழர்கள் என்ற காரணத்திற்காக சர்வதேசம் இணைந்து அழித்தொழித்தது.

இன்றுவரை அதற்கான தீர்வுகளை கிடைக்காதது வேறு விடயம். ஆனால் உலகில் வேறு எந்த இனத்தையும் சர்வதேசமே திட்டமிட்டு சேர்ந்து அழித்தது இல்லை என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

அதேபோல் குமரிக்கண்டம் முதல், சிந்துவெளிச் சமூக காலம் வரை பல வகையான தமிழர்களின் உண்மையான வரலாறுகள் இதுவரையில் பெரிதாக வெளிப்படுத்தப்படவில்லை.

சிந்துவெளி தொல்பொருள் ஆய்வு கூட தொடர்வதற்கு இப்போது கடும் எதிர்ப்பு உள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அதற்கும் மேல் தமிழர் வரலாறு கூறும் பல நூல்கள் தடை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் பல நடந்துள்ளன.

அதேபோல் அண்டைநாடு இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. சற்று சிந்தித்துப் பாருங்கள் இந்தியாவும் உண்மையான தமிழர் வரலாற்றை பாட ரீதியாகவும் புகட்டுவது இல்லை. தமிழரின் பல உண்மைகள் சாதனைகள் புதைக்கப்பட்டே போயின தமிழர் வரலாற்றில்.
அவ்வளவு ஏன் யாழ். நூலகம் எரிக்கப்பட்டதற்கு காரணம் இனக்கலவரம் என்பது சோற்றுக்குள் முழுப் பூசனிப் பொய்.

தமிழர்களின் உண்மையான வரலாறு அழிக்கப்பட வேண்டும் என்ற ஓர் இலக்குக்காகவே யாழ். நூலகமும் எரிக்கப்பட்டது.

இவ்வாறான பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழர்கள் விடயம் அந்த அளவு ஆழமானது.

இவ்வாறு தொடர்ச்சியாகவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் நடந்து கொண்டு வருவது அவதானிக்க கூடிய ஒன்று. ஆனாலும் அவற்றினை நாம் எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.

தமிழர்களிடையே இப்படியான தொடர் பயணத்தில், போராட்ட களமே வாழ்வாகிப்போன தமிழர்களின் நிலை இன்று வேறுபக்கம் திரும்பி விட்டது. அதாவது ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற ஓர் புதுப்பயணத்தில் கால் பதித்து உள்ளான்.

இதில் உச்சகட்ட வியப்பு யாதெனில் வல்லரசுகளுக்கு எல்லாம் வல்லரசான அமெரிக்காவிற்கு எதிராக தமிழன் போர்கொடிகளைத் தூக்கிவிட்ட நிலை ஏற்பட்டு விட்டது.

அமெரிக்காவின் அதிபர் மாறிப்போவார் புது அதிபர் பதவி ஏற்பார் என்பது 500 வருடங்களுக்கு முன்னர் கணிக்கப்பட்ட விடயம். இது நம்ப முடியாத உண்மை இதனை சொன்னது நோஸ்ராடாமஸ் எனும் தீர்க்கதரிசி.

இது மட்டுமல்ல ஆனால் ஆச்சரியம் மிக்க அவருடைய ஓர் கணிப்பே ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் உலகை ஆண்ட ஓர் இனம் மீண்டும் உலகை ஆளத் தொடங்கும் என்பது.

யாரோ எதுவோ சொன்னார்கள் என எடுத்துக் கொள்ள முடியாது என நினைக்க வேண்டாம். இன்றைய நிலையில் இவருடைய தீர்க்க தரிசனங்களால் கதி கலங்கிப் போய் உள்ளது ஒட்டு மொத்த உலக நாடுகளுமே.

இவர் சொன்ன பல தீர்க்கங்கள் அப்படியே அச்சு பிசகாமல் நிறைவேறி வருகின்ற ஓர் காரணத்தினால் சற்று ஆழச் சிந்திப்பு தேவை இவ்விடயத்தில்.

அவர் கூறியதன் படியே இப்போது உலகப்போர் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது என்பது கண் முன்னே தெரிந்து கொண்டு வருகின்றது.

மூன்றாம் உலகப்போரை துவக்கி வைப்பதற்கு காரணமாக இருப்பது டிரம்ப் என்பது நோஸ்ராடாமஸ் கணிப்பு. அது இப்போது தெளிவாகவே தெரிகின்றது.

அதுவும் அணுகுண்டு போரை டிரம்ப் ஆரம்பித்து வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார் தீர்க்கதரிசி. அதுவும் கூட சாத்தியமான விடயமாகவே இருக்கின்றது.

இந்த நிலையிலேயே அதே நொஸ்ராடாமஸின் இன்னோர் கணிப்பில்...,

“உலகை ஆண்ட இனம் ஒன்று மீண்டும் உலகை ஆழ நினைக்கும், அதனால், உலக யுத்தம் மூழும் ஆனாலும் இனம் மீண்டும் ஆளும், அதற்கு அவர்களின் முன்னோர்கள் ஆவிகள் மனதளவில் தைரிய மூட்டும் தூண்டுதலாக இருக்கும்” என்ற பொருளில் குறிப்பிட்டுள்ளார்.

advertisement

இந்த வாக்கியங்கள் பெரும்பாலும் பிரித்தானியா நாட்டிற்கே பொருந்தும் என பல ஆய்வாளர்கள் கூறினாலும் சிந்தித்துப் பாருங்கள்.

உலகின் அனைத்து இடங்களையும் தமிழர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். இது மிகைப்படுத்தப்பட்டது அல்ல வரலாறு நிரூபித்த உண்மை.

அதேபோல் கடந்த சில காலங்களாக தமிழர் மத்தியில் உணர்வு பூர்வமான பல செயல்கள் இடம்பெறுவதை காணமுடிகிறது. அவர்களின் ஆளும் ஆற்றல் ஒரு கட்டத்தில் பின்னடைவை சந்தித்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

உதாரணமாக ட்ரம்ப் பதவி ஏற்ற அதே சமயம் முழு உலகத்தையும் உழுக்கும் வகையில் தமிழர்கள் ஒன்று சேர கிளர்ந்து எழுந்தார்கள். அதுவே முழு உலக அளவிலும் சாதனை படைத்து, அதிர்வை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டம்.

சாதாரண ஜல்லிக்கட்டு என்று எவராலும் இதனை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. தன் இனத்திற்கு அநியாயம் நடக்கின்றது என்பதனை அறிந்து கொண்ட தமிழன் கடல் என ஒன்று திரண்டான்.

தமிழர்களின் இந்த எழுச்சி பல தரப்பட்ட முரண்பட்ட விடயமாக மாறியதையும், சர்வதேசமே விழிப்படைந்து அதிர்ச்சியடைந்ததையும் நாம் நேரடியாகப் பார்த்தோம். ஏன் இவ்வாறு ஒட்டு மொத்த உலகும் பதற்றமடைய வேண்டும்.

இந்த போராட்டம் நிச்சயமாக தமிழர்களின் ஒன்று கூடலையும், எழுச்சியையும் நேரடியாக சர்வதேசத்திற்கே உணரவைத்தது.

இதில் குறிப்பாக நோஸ்ராடாமஸ் கூறியது “ஆண்ட இனம்...” என்பதே அதாவது அவருடைய காலத்திற்கு முதல் ஆண்ட இனம். என்பதே பொருள்.

அப்படி பார்க்கும் போது, அவருடைய காலத்திற்கு முன்னர் குமரிக் கண்டம் தொடக்கம் ஒட்டுமொத்த உலகையும் ஆண்ட ஒரே இனம் தமிழரே. அந்த இனத்தையே அவர் குறிப்பிட்டுள்ளாரா?

ட்ரம்ப் பதவி ஏற்கும் அதே சமயம் மெரினாவில் எழுந்த தமிழர்களின் அலை முழு உலகிலும் எதிரொலித்தது. இந்த எழுச்சி இன்றும் அடக்கப்பட வில்லை.

இந்த ஜல்லிக் கட்டு போராட்டம் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு எதிரானதாகிப் போனது. ஆம் தமிழ் நாட்டில் காப்ரேட் எனும் மாயவலைக்கு எதிரானதாகிப் போனது.

அமெரிக்கா உற்பத்திப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது இது அமெரிக்காவிற்கு வீழ்ந்த ஓர் மிகப்பெரிய பொருளாதார அடி என்பதனை மறுக்க முடியாது.

இதற்கு கிடைத்த பதில் அமெரிக்காவிற்கு எதிரியாக தமிழ்நாடும் தமிழர்களும் மாறி விட்டார்கள். என்பதனையே காட்டுகின்றது.

அமெரிக்கா உட்பட ஆங்கிலேய நாடுகளிலேயே தமிழர்கள் போராட்டம் செய்யும் அளவு ஓர் அடங்காத் திமிருடன் இப்போது பயணித்துக் கொண்டு வருகின்றான் என்பது அறிந்த விடயம்.

இது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது உலக யுத்த விளையாட்டு ஆரம்பமாகி விட்டது அதற்கு திட்டமிட்டுள்ளது இஸ்ரவேல் எனும் நாடு குட்டி நாடு.

இது நம்ப முடியாத உண்மை இது. ஓர்உலக கோட்பாடு எனும் செயற்பாடு அரங்கேற்றப்பட்டு கொண்டு வருகின்றது.

சிரியா ஒரு பக்கம், கூச்சலிடும் வடகொரியா மறுபக்கம், அனைவரையும் அடக்க அமைதியாக அதே சமயம் சதுரங்க காய் நகர்த்தும் அமெரிக்கா ஒரு பக்கம். பலத்திற்காக காத்திருக்கும் ரஷ்யாவும், சீனாவும் தனிப்பக்கம். இடையே அமெரிக்காவை பழிவாங்க காத்திருக்கும் யப்பான்.

இப்படி பல நாடுகள் எதிரிகளாக மாறி விட்டன. இவற்றால் ஏற்படும் யுத்தத்தில் கிடைக்கப்போகும் பதில் அனைத்தும் அடங்கிய பின்னர் தமிழர்களுக்கு அந்த மீண்டும் ஆளும் வாய்ப்பு கிடைக்குமா? தீர்க்கதரிசி கூறியது தமிழர்களின் விடயத்தில் சாத்தியமாகுமா?

எவ்வாறாயினும் இப்போதும், தமிழர் தலைசிறந்த இனமாகவே உலகில் இருக்கின்றனர். உலகின் இயக்கத்திற்கு தமிழர்களின் பங்களிப்பும் இருக்கத்தான் செய்கின்றது.

எப்படியோ யுத்தம் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படக் கூடாது என்பதும் மிக முக்கியம் ஆனால், இதுவரை நடந்ததையும், இனி நடக்கப்போவதையும் எவராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.

தமிழினம் என்பது ஏற்கனவே உலகை ஆண்டதற்கான ஆதாரங்கள் இக்காலகட்டத்தில் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பல நூறு ஆண்டுகளாக முடங்கி, அடங்கி போயிருந்த தமிழ் இனம் மீண்டும் உலக சக்தியாக மாறிவிடுமா?

அதன் படி எதிர்காலத்தை எதிர்ப்பார்த்திருப்போம் உலகை தமிழ் இனம் மீண்டும் ஆளுமா என்பதனை.

கெளதம் இளங்கோ 

தமிழ் மொழியின் பதினாறு சிறப்பு இயல்புகள்.!

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள், தொன்மை, முன்மை; எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை; தூய்மை; செம்மை, மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை.

தமிழ் வரலாறு - திரு.தேவநேயப் பாவாணர்

பாவாணர் கண்டளித்த தமிழின் இப்பதினாறு சிறப்புப் பண்புகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.





1. தொன்மை:

தமிழ் மொழி உலக முதன் மொழியாகும். அது உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும்.
தமிழ், உலகத்து இருளை அகற்றும் சுடராகும்.

எட்டாம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் புறப்பொரும் வெண்பா மாலை எனும் இலக்கண நூலின் ஆசிரியராகிய ஐயனாரிதனர், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்கும் இடத்து,

பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளடு
முற்றோன்றி மூத்த குடி.

என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

 குறிஞ்சி முல்லை வாணர் மிகப்  பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.

மேலும்,
இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து, மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேர முனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றிய சிலப்பதிகாரத்துள்
பஃறுளி யாற்றுடன் பன்மைலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.
என்று பாடியிருப்பது குமரிக்கண்டமே தமிழின் பிறந்தகம் என்பதும் தமிழின் முதுபழன் தொன்மையும் விளக்குகின்றது.

தொன்மை:

 அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையிலும்,
’அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானெனெ மலிந்த ஏழ்தெங்க நாடும்,
ஏழ்மதுரை நாடும்,
ஏழ் முன்பாலை நாடும்,
ஏழ் பின்பாலை நாடும்,
ஏழ்குன்ற நாடும்,
ஏழ்கண காரை நாடும்,
ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவமெ என்றார் என்று உணர்க’ என்று தொடியோள் பௌவமும் என்ற தொடருக்கு உரையாகச் சொன்ன செய்தியில் இருந்து, குமரிக்கண்டத்தில் இருந்த பஃறுளியாற்றிற்கும் குமரி ஆற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும் நமக்கு இவற்றால் தெரிகின்றன.
இவையெல்லாம் தமிழின் தொன்மை குறித்துத் தெளிவாகச் சொல்லும் தமிழ் இலக்கியச் சான்றுகளாம்

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.

விளக்கம்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னேர் தனியாழியான கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.

தண்டியலங்காரத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்ட பழம்பாடல்...

2.முன்மை:

முன்மை என்றால் முந்தி நிற்குந் தன்மை என்க...

செவ்வியல் மொழிகளாக உலகளவில் கருதப்படும் மொழிகள் மொத்தம் ஏழு... அவற்றுள் இன்றைக்கு பாட்டிலும் ஏட்டிலும் நாவிலும் சிறப்பாக வாழும் மொழி நம் தமிழே...

பல செவ்வியல் மொழிகளின் சொற்களின் மூலங்களைத் தமிழில் இருந்து கண்டுபிடித்துள்ளனர் மொழியியலாளர்கள்...

இலக்கணங்களில் இலக்கியங்களில் முந்தியிருப்பவை தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களுமே....

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
- (தொல்காப்பியம் மரபியல்)

மேலுள்ள பாடல், கூர்தலற (பரிணாம) வளர்ச்சி பற்றிய அறிவியலைக் காட்டும் தொல்காப்பியப் பாடல் ஆகும்...

தமிழின் முன்மை இதனால் இனிது விளங்கும்...

3. எண்மை (எளிமை);

ஒலிப்பதில், பேசுவதில், கையாள்வதில், எழுதுவதில், கற்பதில் எளிமை என்பது எண்மை. இது மென்மையும் ஆகும்.

எளிமையான மென்மையான முப்பதே ஒலிகளை மட்டுமே கொண்டு இயங்கும் மொழி நம் தமிழ்.


 தமிழ்ச் சொற்களில், சில மெய் எழுத்துகளுக்குப் பின், வேறு எந்த மெய் எழுத்துகள் வருவது இல்லை. அதே போல சொல்லின் இறுதியில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகியன வருவதே இல்லை.  (ஏக், பான்ச், பாத், ஆப் போன்ற இந்திச் சொற்களையும்; கேக், வாட்ச், டாட், வித், ச்னாப் போன்ற ஆங்கிலச் சொற்களையும் ஓலித்துப் பார்க்க. அவை மிகுந்த அழுத்தத்தோடு முடிவடைவதுடன், அடிவயிற்றை இழுத்துப் பிடித்துச் சொல்ல வேண்டியுள்ளதனை, மூச்சு முட்டுவதனை ஒப்பு நோக்குக)

கல்தோன்றி மண்தோன்றா குறிஞ்சி நிலத்தில், முன் தோன்றிய மூத்த மொழி என்பதனை, எள்ளி நகைக்க வேண்டிய தேவை, தமிழ்ப் பகைவர்க்கு வேண்டுமானால் இருக்கலாம். மேற்கண்ட எளிய உண்மை அறிந்தால் நம் தமிழின் எளிமையும் மென்மையும் விளங்கும்.

மூத்த குடியாதலால் தமிழரின் வாயில் இவை போன்ற கடுமையான சொற்கள் இயற்கையாகவே வரவில்லை. அவர் வாயில் எளிய முறையில் ஒலிக்கக் கூடிய தனியொலிகளும் கூட்டொலிகளுமே பிறந்தன.

எனவேதான் சாக்ஷி என்ற வடசொல்லை சாக்கி என்றும், ஜாதி என்பதனை சாதி என்றும் தென்தமிழ்நாட்டு நெல்லை மாவட்டத் தமிழர்கள் ஒலிப்பதைச் சுட்டிக் காட்டுவார் பாவாணர்.

இவ்வாறு எளிய ஒலிகளைக் கொண்டிருந்தும், தமிழின் ஓசை இனிமைக்கு எந்த குறைவும் வந்துவிடவில்லை என்பார் பாவாணர்.

"தண்டலை மயில்க ளாடத்
 தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவி னோங்கக்
 குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத் 
 தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட 
 மருதம்வீற் றிருக்கு மாதோ"

என்னும் கம்பரின் செய்யுளைப் பாடிப் பார்த்து, தமிழின் ஓசை இனிமையை உணர்ந்துகொள்ளச் சொல்வார் பாவாணர்.


ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களே யன்றித் தனியெழுத்துக்களல்ல.

வெறும்முப்பது ஒலிகளைக் கொண்டே குமரிக்கண்டக் காலத்திலும், இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும் தமிழன் தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லா கருத்துக்களையும் குறிக்கத்தக்க வேர்சொற்களை அன்றே பிறப்பித்து வைத்திருக்கும் மொழி தமிழ் என்பதால், தமிழுக்கு பிற மொழியின் வல்லொலிகள் தேவையில்லை என்பார்.


4. ஒண்மை (ஓளிமை);

ஒளிமை என்பது அறிவொளியாய் இருந்து மக்களை வழிநடத்தும் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மாண்பினைக் குறிக்கும்.

மனித வாழ்வின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து, அதனை நல்வழிப்படுத்துவதற்கு, ஒழுங்குபடுத்துவதற்கு இயற்றப்பட்ட திருக்குறளை விட, இதற்கு எடுத்துக்காட்டுத் தேவையில்லை.

பேச்சினால் வரும் குற்றங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து, அவற்றை மொத்தம் நான்கு குற்றங்கள் என்று தொகுத்தார் வள்ளுவர்.
அவையாவன

1. பொய் பேசுதல்,
 2. புறம் பேசுதல் (அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தீதாகப் பேசுதல். இது கோள் சொல்லுதல், குண்டுணி பேசுதல் என்று இருவகைப்படுமாம், குறளை என்றும் இதனைச் சொல்வர்),
 3. தீயசொற்களைப் பேசுதல்
 4. தேவையற்றதைப் பேசுதல் என்று வகுத்தும் தொகுத்தும் அவற்றை வாய்மை, புறங்கூறாமை, இனியவை கூறல், பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களால் விளக்குகிறார்.

இதில் பொய் என்பது இல்லறத்தார்க்குத் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதால், வாய்மை என்பதை மட்டும் துறவறவியலில் வைக்கிறார். மற்ற மூன்றையும் இல்லறவியலில் வைக்கிறார்.

பொதுவாக , இல்லற வாழ்க்கையில், சொந்தங்களோடு கூடி வாழ்கையில் வரும் சண்டைகளில், பெரும்பான்மைச் சண்டைகள், இந்த மூன்று வகைப் பேச்சுக்களால் தான் என்பதை நாம் எளிதில் உணரலாம். இத்தகைய, வாழ்வில் ஒளி சேர்க்கும் இலக்கியங்களும் இருப்பதனால் தான், தமிழுக்கு ஒண்மை என்ற பண்பு உள்ளது என்று கூறுகிறோம்.

ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழ் என்று.


5. இளமை : எழில் கொஞ்சும் இளமை.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

என்று பாடினார், பேராசிரியர் பெரும்புலவர் மனோன்மணியம் கண்ட பெ.சுந்தரனார்..

மேற்கண்ட பாடலின் பொருள்:

தமிழ்மொழியானது, தன் வயிற்றில் இருந்து பல மொழிகளை பெற்றெடுத்த தாயாய் இருந்தும், ஆரிய சமற்கிருதம் போல் பேச்சு வழக்கின்றி அழிந்து  சிதைந்து போகாது, இன்றும் வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாமல், தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது எப்படியுள்ளது என்றால், பல உயிர்களைப் பல உலகங்களைப் படைத்தும் அழித்தும் செய்த செய்கின்ற எல்லாம் வல்ல இறைவன் தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது போலவுள்ளதன்றோ.. அத்தகைய தமிழின் சீரிய இளமையின் திறத்தை வியந்து செயல்மறந்து வாழ்த்துவோமே.....(பிள்ளை பெற்றவுடன், தாய் முதுமையுறுதல் போல அல்லாமல், முன் இருந்தபடியே இளமையாய் இருக்கும் தமிழின் இளமையைப் போற்றுவது என்றவாறு)

6. வளமை - (சொல், பொருள், இலக்கண, மொழி, இலக்கிய வளமை)

இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலைப் பெயர்களும்,

அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐந்து நிலைப் பூப் பெயர்களும்,

கச்சல் (வாழை), வடு (மா), குரும்பை (தென்னை பனை) என்னும் பல்வேறு பிஞ்சுகளின் சிறப்புப் பெயர்களும் தமிழின் சொல்வளத்தைக் காட்டும்.

யானையைக் குறிக்க 25 பெயர்கள் உள்ளன.

கன்று,பிள்ளை,குட்டி,குஞ்சு,சேய்,குழந்தை, எனப்பலவாறு அழைப்பது மொழியின் வளம் மட்டுமல்லாது தொன்மையையும் காட்டும்.

இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே.  யாப்பு வளம், இசை வளம், பொருள் வளம் என எத்துணையோ அத்துணையும் கொண்டது நம் தமிழேயென்க.   

அன்பின் வழியது உயிர்நிலை என்பதே நம் ஆழ்ந்த கருத்து வளத்தைக் காட்டப் போதுமானதாகும்.

7. தாய்மை; (பல மொழிகளை ஈன்றெடுத்த தாய்மை)

இன்றைய அரசியல் நிலை காரணமாக தமிழின் தாய்மைப் பண்பு மறைக்கப்பட்டு, திராவிட மொழிக்குடும்பம் எனும் ஏமாற்றுச் சிறையில் கிடந்தாலும், தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும் தமிழின் திரிபே என்பதும், தமிழே திராவிட மொழிகள் என்று சொல்லப்படும் மொழிக்குடும்பத்தின் தாய் மற்றும் மூலம் என்பதுவும் மறுக்கவியலாத உண்மையாகும்.

பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச் சொற்கள், ஆரியம் என்னும் வட மொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

வீடு என்ற சொல்லை மட்டுமன்றி , இல் என்னும் தெலுங்குச் சொல்லையும், மனை என்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (பின்னிஸ்) மொழிகட்கும் பொதுவான குடி என்னும் சொல்லையும் தன்னகத்தே தமிழ் கொண்டுள்ளது.

சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பங்கு தமிழ்ச்சொல்லே என்பது இன்று ஆராய்ச்சியால் நிருவப்பட்டுள்ளது என்பார் பாவாணர்.

இவை தமிழின் தாய்மைக்குத் தக்க சான்றுகளாம்.

8. தூய்மை :

பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன் வாங்கியதால்தான் ஆங்கிலம் வளர்ந்தது. அதே போல் தமிழையும், சொற்களை கடன் வாங்கிக் கொண்டு வளர்ப்பதில், என்ன குற்றம் என்று கேட்போர் உளர்.

ஆங்கிலத்தின் சொல்வளம் பற்றி அறிய, அம்மொழியில், காயைப், 'பழுக்காத பழம்' என்று குறிப்பது ஒன்றே போதும். ஆனால் தமிழில் சொல் வளக் குறை உள்ளதா?

சாளரம், பலகணி, காலதர் என்னும் மூன்று சொற்கள் இருந்த போதிலும் போர்த்துகீசியச் சொல்லான சன்னல் என்பதை தேவையில்லாது தமிழர்கள் வழங்கி வந்ததால், அம்மூன்று தமிழ்ச்சொற்களும் வழக்கொழிந்து போயிற்று.

தமிழர்க்குள்ள பெருமை எல்லாம் அவர் தொன்றுதொட்டுத் தூயதாக வழங்கி வரும் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது என்பார் மறைமலையடிகள்.

மிளகை மட்டும் அறிந்த அக்காலத் தமிழர்கள், மிளகாய் இங்கு வந்தவுடனே, மிளகைப் போன்ற காய் என்று பொருள்படும்படி, மிளகாய் என்ற தனித்தமிழ் பெயர் வைத்து வழங்கியதைக் கண்டுகொள்வோம்.

செந்தமிழ், கொடுந்தமிழ் (கொடுமை என்றால் வளைந்த தன்மை... பேச்சு நடைத் தமிழ்) என்று இன்றளவிலும், இரு நிலைகளிலும் வாழும், ஒரே மொழி, தமிழே.

எழுதப்படிக்கத் தெரியாதவர் கூட, மேடையேறிப் பேசும்போது செந்தமிழில் பேசுவது என்பது, தமிழர்கள் இயல்பாகவே செய்து வரும் நடவடிக்கை என்பதை உணர்த்தும்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக, தமிழ் மொழி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு, மணிப்பிரவாளம் என்ற கலப்பு நடை வளர்க்கப்பட்டு வந்த போதும், வடமொழி மட்டுமல்லாது, 27 மொழிகள் தமிழைத் தாக்கியபோதும், மீண்டும் மீண்டும், மீண்டு எழும் தமிழின் தூய்மை, அதன் இயல்பான பண்பாகும் என்பதனை அறிவோம்.

"என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே"

என்றார் திருமூலர் வாய்மொழியைப் பேணுவோம்.

9. செம்மை - (செழுமை)

தமிழ் மொழி, செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரு நிலைகளாக உள்ளது. மக்களுக்கு ஒழுக்க வரம்பு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பு ஆகும். சொற்களின் திருந்திய வடிவையும் ஒழுங்கையும், தமிழில் நாம் தெளிவாக காண முடியும்.
'என்ன செய்யுற' என்று பேசினாலும், 'என்ன செய்கிறாய்' என்றே எழுதப்படுவது நம் நடைமுறை.
இவ்வாறு இரு நிலைகளாக வேறு மொழிகளில் நடைமுறை இல்லை என்பது தமிழின் செம்மைக்குச் போதிய சான்றாம்.

தமிழில் புதுப்பெருக்கு நீரைக் குறிக்கும் வெள்ளம் என்னும் செந்தமிழ்ச் சொல், மலையாளத்தில் நீர்ப் பொதுவைக் குறிப்பதும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்புதல் என்னும் செந்தமிழ்ச் சொல், தெலுங்கிற் பொதுவாகச் சொல்லுதலைக் குறித்தலும், ஒன்றைச் செய்ய திறமையோடிருத்தலைக் குறிக்கும் மாட்டுதல் என்னும் செந்தமிழ்ச் சொல் கன்னடத்தில் மாடுதல் என்னும் வடிவில் பொதுவாகச் செய்தலைக் குறிக்கின்றமையும்
 கொடுந்தமிழ் நிலையாம். கூர்ந்து பார்த்தலைக் குறிக்கும் நோக்குதல் என்னும் சொல், மலையாளத்திற் பொதுவாகப் பார்த்தலைக் குறித்தலும் அஃதே.

செந்தமிழ் எழுத்துகள் கொடுந்தமிழிற் பலவாறு திரியுமேனும், வலி மெலித்தல் மலையாளத்திற்கும், ரகரம் தொகல் (மறைதல்) தெலுங்கிற்கும், பகரம் மூச்சொலியாதல் கன்னடத்திற்கும் சிறப்பாகும்

எடுத்துக்காட்டு:

மலையாளம்: கஞ்சி - கஞ்ஞி, நீங்கள் - நிங்ங்ள், வந்து -  வந்நு...

தெலுங்கு:பருப்பு -  பப்பு, மருந்து -  மந்து

கன்னடம்: பள்ளி - ஹள்ளி, பாளை -ஹாளெ, பொன்- ஹொன்னு

வடசொற்கள் பின்வருமாறு பலவகையில் திரியும்:
ஆயிரம் -ஸகஸ்ர, கலுழன் -கருட(g), கோட்டம்- கோஷ்ட, சாயை -சாயா (ch), தூண்டம் - ஸ்தூணா, மயில் -மயூர முகம்- முக(kh) வட்டம் - வ்ருத்த.

இனனும் விரிவுக்குப், பாவாணரின் ‘செந்தமிழ்ச் சிறப்பு’ என்ற நூலைக் காண்க.


10. மும்மை (இயல், இசை, நாடகம் என இயங்கும் முத்தன்மை)

இயல், இசை,  நாடகம் என்றே, தொன்று தொட்டு முதலே இயங்கி வருதலோடு, அம்மூன்றுக்கும் தனியிலக்கணங்கள் கொண்டிருந்த மொழி தமிழ் என்பதனாலேயே, முத்தமிழ் என்ற அடை, தமிழுக்குச் சிறப்பாகப் பொருந்துகிறது எனலாம்.

11. இனிமை

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே.

திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே!!

சிலம்பின் இக்கானல்வரிகளே தமிழினினிமைக்குப் போதிய சான்றாம்.


12. தனிமை :

தனித்து இயங்கும் தன்மை.

இது வேறெம்மொழிக்கும் இல்லாத தமிழின் தனிப்பெருஞ் சொத்தாகும்.

தமிழ் மொழியானது வேறு எந்த மொழியின் சொற்களைப் பயன்கொள்ளாமல் தனித்து இயங்கும் தன்மை கொண்ட ஒரே மொழியாகும்.

 ‘மற்ற மொழிகளில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர, அதன் வளம் பெருகும். தமிழில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர அதன் வளம் குன்றும்.’

பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளரும் என்பது உண்மைக்கு மாறானது. கற்களைக் கலந்தால்தான் அரிசி வளரும் என்பதைப் போன்றது.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப்பகைவர்கள் சிலர், ‘தனித்தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன் எனக் கூறிப் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.

புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒரு மொழி புரியவில்லை என்றால், அவன் அந்த மொழியைப் படிக்கவில்லை என்பது பொருள். தமிழ் தெரியவில்லை, புரியவில்லை என்றால் தமிழைப் படி. அதைவிட்டு நீயும் தமிழைப் படிக்காமல், தமிழ் அறியாதவனுக்குப் புரியும்படி எழுதுகிறேன் என்றால் அது எப்படி தக்கதாகும்? அப்படி எழுதினாலும் அது ஒரு புதுமொழியாக இருக்குமே யன்றி எப்படித் தமிழ் மொழியாக விருக்கும்?

அட்காக் கமிட்டி, லோக் சபா, ஜனாதிபதி, மஜ்தூர், ஆகாசவாணி எல்லாம் புரியும்போது, தமிழனுக்குத் தமிழ் புரியாது எனக் கூறுவது வெட்கக் கேடானது. வடமொழிச் சொற்களையும் நன்கு பலுக்கும் தமிழனுக்குத் ‘தமிழ் பலுக்க வராது‘ எனக் கூறுவது மானக்கேடாகும்."
தமிழின் சிறப்பு என்ற நூலில் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறியது.


13. நுண்மை :

தமிழின் நுண்மைக்கு, உயிரும் மெய்யும் என்று எழுத்துகளை வகைப்படுத்தியது தொடங்கி கணக்கிலா சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இதோ.

தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியலின் சுருக்கம்:

நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு' என்ப.

என்று மெய்ப்பாடுகள் (மெய் படும் பாடுகள்) எட்டே என்று குறித்ததோடு...

*அவற்றுள் நகை என்பது...

"எள்ளல், இளமை, பேதைமை, மடன், என்று
உள்ளப்பட்ட நகை நான்கு' என்ப"

என்று நான்கு வழி வருவதே நகை என்றும்...
  
*அழுகை என்பதோ...

"இளிவே, இழவே, அசைவே, வறுமை, என
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே"

*இளிவரல் என்னும் இழிவுறுதல்.  இகழ்வுறுதல் என்பதோ...

மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையொடு,
யாப்புற வந்த இளிவரல் நான்கே.

*மருட்கை எனப்படும் வியப்புறுதல் என்பதோ...
  
"புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு,
மதிமை சாலா மருட்கை நான்கே."
  
*அச்சம் என்பதோ...

அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை, எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.
  
*பெருமிதம் என்பதோ...

கல்வி, தறுகண், புகழ்மை, கொடை, எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.
  
*வெகுளி எனப்படும்  சினத்தல் என்பதோ

உறுப்பறை, குடிகோள், அலை, கொலை, என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.

*உவகை என்பதோ
  
செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு, என்று
அல்லல் நீத்த உவகை நான்கே.

இவ்வாறான நுட்பமான உளவியல் வரையறைகளை, தன் முதுபழம் நூலான தொல்காப்பியத்துள் வைத்துக் காட்டுவதே, நம் தமிழின் நுண்மைக்குச் சான்றாம்.

14. திருமை - 'திரு' என்னும் அடை பொருந்தும் தன்மை, தெய்வமாகிய தன்மை.

இன்றைய அளவில், தமிழரைக் காப்பாற்ற, தமிழை விட வேறு தெய்வம் இல்லை என்க.

திருமைக்கு அழகு என்றும் பொருள்.


15. இயன்மை - இயல்பான தன்மை...

தமிழர்களால் தம் வாழ்வோடு இணைந்து தம் வாழ்வுக்காக படிப்படியாக உருவாக்கிய மொழி... செயற்கையாக உருவாக்கப்படாமல் இயல்பாக உருவான மொழி... தேவபாடை என்பது போன்றது அல்லாமல் இது பல்லாயிரத் தலைமுறைத் தமிழர்களின் இயல்பான வாழ்க்கையினால்   உருவானது என்க...
(சிவன் தமிழ்க்கழகத்தில் அமர்ந்து தமிழை ஆய்ந்தார் என்றே பாடல்கள் உள்ளன... தமிழைத் தோற்றுவித்தார் எனப் பாடப்படவில்லை...)

மேலும் செயற்கையாக உருவாகாத மொழி என்பதால் பெரும்பாலான சொற்களுக்குத் தமிழிலேயே வேர்ச்சொல் இருப்பதும், மொழியியல் அதாவது ஒரு மொழி எப்படித் தோன்றுகிறது, என்ற அறிவியலுக்கு ஆராய்ச்சிக்குத், தமிழே துணை நிற்கும், என்று அறிஞர்கள் கூறுவர்...


16. வியன்மை - உலகெங்கும் பரவியுள்ள தன்மை ...  சில தமிழ்ச் சொற்கள் உலகெங்கும் உள்ள மொழிகளுக்குப் பரவியுள்ளன... எ.டு. அம்மா, அம்மை, அப்பன்.

இவையே பாவாணர் தமிழின அரும்பண்புகளாகக் கண்டு சொன்ன பதினாறு குணங்களாகும். நன்றி...

கெளதம் இளங்கோ