CAB க்கும் தமிழ்நாட்டு / இந்திய முஸ்லீம்களுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறாங்க.
நல்ல கேள்வி போலத் தெரியுதுல்ல. அதுக்கு முன்ன NRCக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுப்போம்.
ஆமா NRC ன்னா கணக்கெடுப்புதான. ஒரு நாடு தன் மக்களைக் கணக்கெடுக்கறதுல என்ன தப்புன்னு தோனுதா?
ம்ம்ம்...
NRC National Register of Citizen. தேசிய குடிமக்கள் ஆணையம். ஏற்கனவே அஸ்ஸாம்ல வந்ததுதான்.அங்க நிறைய சிக்கல்களை உருவாக்கியது இப்ப நாடு முழுக்க வரப்போகுது.
4 லட்சம் கோடிக்கு மேல செலவாகுமாம்.நாடு இருக்கற பொருளாதார நிலையில இப்ப இது தேவையா?
தேவைன்னே வச்சுப்போம்.ஆனா நடக்கப்போவது என்ன?
இந்த NRC திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தான் இந்தியன் தான்னு நிரூபிக்கணும்.
அதான் சர்வரோக நிவாரணி ஆதார் இருக்கேன்னு கேக்கலாம். பழைய அம்மன் படங்கள்ல ஒரு குறிப்பிட்ட சூரிய கிரகணத்தப்ப அம்மனுக்கு சக்தி போயிடற மாதிரி ஆதாருக்கு இப்ப சக்தி இல்ல.
பாஸ்போர்ட் கூடப் பத்தாது.
இத்தனைக்கும் இந்தியாவுல கஷ்டப்பட்டு வாங்கப்படுற ஒரு ஆவணம் பாஸ்போர்ட் தான். ஆனா அதுவும் பத்தாது. நீங்க எல்லாருமே இப்ப தீவிரவாதி இல்லன்னா வந்தேறி. காசு கொடுத்து வாங்கிருப்பீங்க. நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்.
சரி அப்றம் எப்டி நிரூபிக்கறது?
பழையபடி பர்த் சர்டிபிகேட் பட்டா
நில உரிமைச் சான்று தாசில்தார் சர்டிபிகேட்னு போகவேண்டியிருக்கும். ஒரு ஆதார் கார்டு வாங்கவே ஒவ்வொருத்தரும் அலையற இந்தக் காலத்துல எத்தனையோ பேருக்குப் பிறந்தநாளே சரியாத் தெரியாத இந்த நாட்டுல இத்தனையையும் ஒருத்தன் எப்டி கொண்டுவந்து தருவான்.
தரணும் , தந்தாத்தான் அவன் குடிமகன் குடிமகள்.
மின்சாரமே எட்டிப்பாக்காத கிராமங்கள்ல ஆட்சி அதிகாரமே எட்டிப்பாக்காத மலைப்புறங்கள்ல இவ்ளோ ஏன் எல்லாம் இருக்கற நகரத்துலயும் இதெல்லாம் இல்லாதவங்க வாழ்நாள் முழுக்க வாடகை வீட்லயே வாழ்றவங்க ஓட்டுக்கூட இல்லாதவங்க இவங்கள்லாம் என்ன பண்ணுவாங்க?
இந்தியாவுல பாதிப் பேர் இப்படிப்பட்டவங்கதான்.
எளிதில் எடுக்கக்கூடிய ஆதார்லயே இதுவரை 120 கோடிப் பேர் தான் வந்துருக்காங்க.
இன்னும் 20 கோடிப் பேர் அனாமத்தாத் தான் திரியுறோம். அப்படிப்பட்ட ஆதாரே தேவையில்லன்னா எந்தக் கணக்கெடுப்புல இந்த லிஸ்ட் முழுமையாகும்.
ஆக ஆதாரமில்லாதவங்க நிலைமை என்ன?
நாடு கடத்தப்படணுமா? என்ன வழி?
இங்கதான் வருது ட்விஸ்ட் CAB Citizenship Amendment Bill.
இப்ப ஒரு 3 பேர் இருக்காங்க. அரவிந்த் ஆர்யா அகமது.
இதுல அரவிந்த்க்கு ஏதோ ஒரு ஆவணம் இருக்கு. அவர் குடிமகன்.
ஆர்யாவுக்கும் அகமதுவுக்கும் ஆவணம் இல்ல. ரெண்டு பேரையும் ஊரவிட்டுத் தள்ளிவைக்கலாம்னு வருது. இப்ப CAB என்ன சொல்லுது?
ஆர்யா ஆப்கனிஸ்தான்லருந்து வந்து ஒரு ஏழு வருஷமாத்தான் இந்தியாவுல இருக்காப்ல. ஆனா அகமது பொறந்ததே இந்தியாவுலதான். ஆனா முறையான ஆவணம் இல்ல. அல்லது மிஸ்ஸாகிடுச்சு. பேப்பர்தான.
சுனாமில கூடப் போயிருக்கலாம்னு வச்சுப்போம்.
CAB படி ஆர்யா ஒரு அகதி. அவர் 6 ஆண்டுக்கு மேல இருக்கறதால அவர் குடிமகன்.
அப்ப அகமது?
இரு இரு. அகமது பத்தி உனக்கென்ன கவலை? நீ இந்தியனா ஆன்டி இந்தியனா தேச துரோகியா? எதாவது இயக்கத்தைச் சேர்ந்தவனா?
இல்லல்ல. சும்மாதான் கேட்டேன். அகமது பல வருஷமா இங்க நம்மகூடப் பழகுனவன்தான. அதான் கேட்டேன்.
ஓ. சரி அகமது ஒரு முஸ்லீம். அவர் குடிமகன் இல்ல. அகதியும் இல்ல. வந்தேறி...
இப்டி பாதி முஸ்லீமை வடிகட்டி வந்தேறி ஆக்கிடமுடியும். உங்ககிட்ட இருக்க ஆதாரத்தை அழிச்சுக்கூட உங்களை நாடுகடத்தலாம்.
இவங்களை என்ன பண்ணுவாங்கன்னு அவங்களுக்கே வெளிச்சம்.
இப்ப சொல்லுங்க நீங்க மனசார CAB யை வரவேற்குறீங்களா?
இது நியாயமா?
இது மதரீதியிலான பிரிவாகாதா?
தனித்தனியாப் பாக்குறப்ப CAB ஒரு கணக்கெடுப்பு.
NRC ஒரு குடியுரிமைச்சட்டம்.
ஆனா ரெண்டும் ஒன்னு சேரும்போது அது வேற ஒரு வினைப்பொருளை மாறி வெடிக்கத் தொடங்குது.
எத்தனையோ அப்பாவி மக்களின் வாழ்வை மாத்தப் போகுது. இதத் தான் வேணாங்கறோம்.
இதை எதிர்த்துத் தான் என்னை மாதிரி வெட்டிப்பசங்க கத்துறோம். இதைப் பத்தித் தெரிஞ்ச இதோட விளைவுகளைப் புரிஞ்சுக்கிட்ட மாணவர்களும் ஒரு சில அரசியல்வாதிகளும் நாட்டுப்பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்களும் போராடுறாங்க.
இது என்னன்னே தெரியாம சலம்புறவங்க கொஞ்சமாவது புரிஞ்சுக்கங்க. இது அநீதி.
ஆனா எல்லாம் தெரிஞ்சும் இதை வேணும்னே நாடு இன்னிக்கு இருக்க கஷ்டத்தை பொருளாதார சிக்கலை மறைக்கறதுக்காகத் தூண்டிவிட்டுக் குளிர்காயற ரத்தவெறி பிடிச்ச மிருகங்கள் கிட்ட கவனமா இருங்க.
ஏன்னா நாளைக்கு அவன் வேற காரணம் சொல்லி உங்ககிட்ட வருவான். வருங்காலத்துல அவன் என்ன பண்ணுவான்னு தெரியாது.
இன்னிக்கு பிறப்புவாரியா ஆவணங்கள் வாயிலாக குடியுரிமையை ரத்து பண்ணிக் கூண்டுல ஏத்துறது போல நாளை மொழிவாரியாகவும் வரலாம்.
இந்தி தெரியாதவன் இந்தியனான்னு கேப்பான். இன்னிக்கு அவன் கிட்ட வந்தவன் நாளைக்கு நம்மகிட்ட வரமாட்டான்னு என்ன நிச்சயம்??
கொஞ்சமாவது கண்ணை முழிச்சுப் பாருங்க. டாட்.