Tuesday, 17 December 2019

குடியுரிமைச் சட்டம் & தேசிய குடிமக்கள் பதிவேடு (CAB & NRC)

CAB க்கும் தமிழ்நாட்டு / இந்திய முஸ்லீம்களுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறாங்க.

நல்ல கேள்வி போலத் தெரியுதுல்ல. அதுக்கு முன்ன NRCக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுப்போம்.

ஆமா NRC ன்னா கணக்கெடுப்புதான. ஒரு நாடு தன் மக்களைக் கணக்கெடுக்கறதுல என்ன தப்புன்னு தோனுதா?

ம்ம்ம்...


NRC National Register of Citizen. தேசிய குடிமக்கள் ஆணையம். ஏற்கனவே அஸ்ஸாம்ல வந்ததுதான்.அங்க நிறைய சிக்கல்களை உருவாக்கியது இப்ப நாடு முழுக்க வரப்போகுது.

4 லட்சம் கோடிக்கு மேல செலவாகுமாம்.நாடு இருக்கற பொருளாதார நிலையில இப்ப இது தேவையா?

தேவைன்னே வச்சுப்போம்.ஆனா நடக்கப்போவது என்ன?

இந்த NRC திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தான் இந்தியன் தான்னு நிரூபிக்கணும்.

அதான் சர்வரோக நிவாரணி ஆதார் இருக்கேன்னு கேக்கலாம். பழைய அம்மன் படங்கள்ல ஒரு குறிப்பிட்ட சூரிய கிரகணத்தப்ப அம்மனுக்கு சக்தி போயிடற மாதிரி ஆதாருக்கு இப்ப சக்தி இல்ல.

பாஸ்போர்ட் கூடப் பத்தாது.

இத்தனைக்கும் இந்தியாவுல கஷ்டப்பட்டு வாங்கப்படுற ஒரு ஆவணம் பாஸ்போர்ட் தான். ஆனா அதுவும் பத்தாது. நீங்க எல்லாருமே இப்ப தீவிரவாதி இல்லன்னா வந்தேறி. காசு கொடுத்து வாங்கிருப்பீங்க. நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்.

சரி அப்றம் எப்டி நிரூபிக்கறது?

பழையபடி பர்த் சர்டிபிகேட் பட்டா

நில உரிமைச் சான்று தாசில்தார் சர்டிபிகேட்னு போகவேண்டியிருக்கும். ஒரு ஆதார் கார்டு வாங்கவே ஒவ்வொருத்தரும் அலையற இந்தக் காலத்துல எத்தனையோ பேருக்குப் பிறந்தநாளே சரியாத் தெரியாத இந்த நாட்டுல இத்தனையையும் ஒருத்தன் எப்டி கொண்டுவந்து தருவான்.

தரணும் , தந்தாத்தான் அவன் குடிமகன் குடிமகள்.

மின்சாரமே எட்டிப்பாக்காத கிராமங்கள்ல ஆட்சி அதிகாரமே எட்டிப்பாக்காத மலைப்புறங்கள்ல இவ்ளோ ஏன் எல்லாம் இருக்கற நகரத்துலயும் இதெல்லாம் இல்லாதவங்க வாழ்நாள் முழுக்க வாடகை வீட்லயே வாழ்றவங்க ஓட்டுக்கூட இல்லாதவங்க இவங்கள்லாம் என்ன பண்ணுவாங்க?

இந்தியாவுல பாதிப் பேர் இப்படிப்பட்டவங்கதான்.

எளிதில் எடுக்கக்கூடிய ஆதார்லயே இதுவரை 120 கோடிப் பேர் தான் வந்துருக்காங்க.

இன்னும் 20 கோடிப் பேர் அனாமத்தாத் தான் திரியுறோம். அப்படிப்பட்ட ஆதாரே தேவையில்லன்னா எந்தக் கணக்கெடுப்புல இந்த லிஸ்ட் முழுமையாகும்.

ஆக ஆதாரமில்லாதவங்க நிலைமை என்ன?

நாடு கடத்தப்படணுமா? என்ன வழி?

இங்கதான் வருது ட்விஸ்ட் CAB Citizenship Amendment Bill.

இப்ப ஒரு 3 பேர் இருக்காங்க. அரவிந்த் ஆர்யா அகமது.

இதுல அரவிந்த்க்கு ஏதோ ஒரு ஆவணம் இருக்கு. அவர் குடிமகன்.

ஆர்யாவுக்கும் அகமதுவுக்கும் ஆவணம் இல்ல. ரெண்டு பேரையும் ஊரவிட்டுத் தள்ளிவைக்கலாம்னு வருது. இப்ப CAB என்ன சொல்லுது?

ஆர்யா ஆப்கனிஸ்தான்லருந்து வந்து ஒரு ஏழு வருஷமாத்தான் இந்தியாவுல இருக்காப்ல. ஆனா அகமது பொறந்ததே இந்தியாவுலதான். ஆனா முறையான ஆவணம் இல்ல. அல்லது மிஸ்ஸாகிடுச்சு. பேப்பர்தான.
சுனாமில கூடப் போயிருக்கலாம்னு வச்சுப்போம்.

CAB படி ஆர்யா ஒரு அகதி. அவர் 6 ஆண்டுக்கு மேல இருக்கறதால அவர் குடிமகன்.

அப்ப அகமது?

இரு இரு. அகமது பத்தி உனக்கென்ன கவலை? நீ இந்தியனா ஆன்டி இந்தியனா தேச துரோகியா? எதாவது இயக்கத்தைச் சேர்ந்தவனா?

இல்லல்ல. சும்மாதான் கேட்டேன். அகமது பல வருஷமா இங்க நம்மகூடப் பழகுனவன்தான. அதான் கேட்டேன்.

ஓ. சரி அகமது ஒரு முஸ்லீம். அவர் குடிமகன் இல்ல. அகதியும் இல்ல. வந்தேறி...

இப்டி பாதி முஸ்லீமை வடிகட்டி வந்தேறி ஆக்கிடமுடியும். உங்ககிட்ட இருக்க ஆதாரத்தை அழிச்சுக்கூட உங்களை நாடுகடத்தலாம்.

இவங்களை என்ன பண்ணுவாங்கன்னு அவங்களுக்கே வெளிச்சம்.

இப்ப சொல்லுங்க நீங்க மனசார CAB யை வரவேற்குறீங்களா?

இது நியாயமா?
இது மதரீதியிலான பிரிவாகாதா?

தனித்தனியாப் பாக்குறப்ப CAB ஒரு கணக்கெடுப்பு.
NRC ஒரு குடியுரிமைச்சட்டம்.

ஆனா ரெண்டும் ஒன்னு சேரும்போது அது வேற ஒரு வினைப்பொருளை மாறி வெடிக்கத் தொடங்குது.

எத்தனையோ அப்பாவி மக்களின் வாழ்வை மாத்தப் போகுது. இதத் தான் வேணாங்கறோம்.
இதை எதிர்த்துத் தான் என்னை மாதிரி வெட்டிப்பசங்க கத்துறோம். இதைப் பத்தித் தெரிஞ்ச இதோட விளைவுகளைப் புரிஞ்சுக்கிட்ட மாணவர்களும் ஒரு சில அரசியல்வாதிகளும் நாட்டுப்பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்களும் போராடுறாங்க.

இது என்னன்னே தெரியாம சலம்புறவங்க கொஞ்சமாவது புரிஞ்சுக்கங்க. இது அநீதி.

ஆனா எல்லாம் தெரிஞ்சும் இதை வேணும்னே நாடு இன்னிக்கு இருக்க கஷ்டத்தை பொருளாதார சிக்கலை மறைக்கறதுக்காகத் தூண்டிவிட்டுக் குளிர்காயற ரத்தவெறி பிடிச்ச மிருகங்கள் கிட்ட கவனமா இருங்க.

ஏன்னா நாளைக்கு அவன் வேற காரணம் சொல்லி உங்ககிட்ட வருவான். வருங்காலத்துல அவன் என்ன பண்ணுவான்னு தெரியாது.

இன்னிக்கு பிறப்புவாரியா ஆவணங்கள் வாயிலாக குடியுரிமையை ரத்து பண்ணிக் கூண்டுல ஏத்துறது போல நாளை மொழிவாரியாகவும் வரலாம்.

இந்தி தெரியாதவன் இந்தியனான்னு கேப்பான். இன்னிக்கு அவன் கிட்ட வந்தவன் நாளைக்கு நம்மகிட்ட வரமாட்டான்னு என்ன நிச்சயம்??

கொஞ்சமாவது கண்ணை முழிச்சுப் பாருங்க. டாட்.

Sunday, 29 September 2019

விண்வெளி குப்பைகள்


நாம் பொதுவாக திரைப்படங்களில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் படத்தை காட்டுவதை பார்த்திருப்போம்.
அழகாக மிதக்கும் ஒரு பந்து போல காட்டப் பட்டிருக்கும்.

ஆனால் உண்மையில் நீங்கள் கற்பனை செய்ய வேண்டியது உங்கள் கண்ணெதிரே மிதக்கும் அந்த லட்டுவை சுற்றி ஒரு 50 ...100 ஈக்கள் என்று மொய்த்து கொண்டு இருப்பதை போல தான்.

அந்தளவு விண்வெளிக் குப்பை சேர்ந்துள்ளது நமது சுற்றுவட்டப் பாதையில்.
பொதுவாக ஆயுள் முடிந்த செயற்கைகோள்களுக்கு இரண்டு வகையில் முடிவு கட்டுகிறார்கள்.
ஒன்று செயற்கைக்கோள்கள் தங்கள் ஆயுள் முடித்துக் கொண்டதும்.
அவைகளின் சுற்றும் வேகத்தை குறைப்பார்கள்.. சுற்றும் வேகம் குறைந்ததும் அந்த செயற்கைக்கோள்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஆளாகி வளி மண்டலத்திற்குள் நுழையும்.
அவைகள் எரிந்து கொண்டே வந்து மிச்ச மீதி pieces பூமியில் விழும்

அதை விழ வைப்பதற்கென்றே தனியாக ஒரு இடத்தை ... உலகிலேயே மிக ஆளரவமற்ற மனித நடமாட்டம் இல்லாத.. ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள்.
அந்த இடத்திற்கு பெயர்... "the space craft semetery " .அந்த இடம் தெற்கு பசிபிக் இல் உள்ளது.
இதுதான் உலகிலேயே மிக மனித நடமாட்டம் குறைவான இடம்.




பொதுவாக செயற்கை கோள்களுக்கு 25 year rule இருக்கிறது அதாவது 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் அது நன்றாக வேலை செய்தாலும் கூட பாதுகாப்பு காரணமாக
அதற்க்கு ரிடயர்மெண்ட் கொடுத்து விட வேண்டும்.
(அணு உலைகளில் கூட இந்த 25 year rule கடைபிடிக்க படுகிறது )

ஆனால் மேல் சொன்ன படி செயற்கைக்கோளின் வேகத்தை குறைத்து அதை பூமியில் விழ வைப்பது கொஞ்சம் செலவு பிடிக்கக் கூடிய ஒரு விஷயம். இதற்கு மாற்று ஏற்பாடாக விஞ்ஞானிகள் வேறு இரண்டாவது வழியை வைத்திருக்கிறார்கள். அது தான் "graveyard orbit.. "
பொதுவாக செயற்கை கோள்கள் பூமியில் இருந்து வெவ்வேறு உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சிலது பூமிக்கு கொஞ்சம் நெருக்கமாகவும் சிலது பூமியை விட்டு வெகு தொலைவிலும்....




உதாரணமாக விண்வெளி ஆய்வு மையமான ISS பூமியில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. அதே சமயம் "geostationary satellites "மாதிரியான செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலான உயரத்தில் சுற்றி வருகின்றன.

இவற்றின் ஆயுட்காலம் முடிந்த பின் இவைகளை வேகம் குறைந்து பூமிக்கு இழுபதை விட இவைகளின் வேகத்தை அதிகரித்து... இப்போது இயங்கி கொண்டிருக்கும் செயற்கைக் கோள்களை விட வெகு தொலைவில் அனுப்பிவிடுவது எளிதானது.

இவைகளை 36000 கிலோ மீட்டர் தொலைவு சென்று விட்டு விடுவார்கள்.
இந்த இடம் ஒரு விண்வெளி சுடுகாடு.
இந்த இடத்தை தான் "graveyard orbit" என்று அழைக்கிறார்கள். இறந்து போன நூற்று கணக்கான செயற்கைக்கோள்களின் பிணங்கள்.. குப்பைகள் சுற்றி திரியும் ஒரு இடம்.

இது தற்போது இயக்கத்தில் இருக்கும் செயற்கை கோள்களை விட 300 கிலோ மீட்டர் உயரம் அதிகம்.கைவிட பட்ட இந்த மாதிரி செயற்கை கோள்களின் குப்பை பெல்ட் பெரிய space garbage ஆக மேலே சுற்றி கொண்டு இருக்கிறது.

இவைகள் எதற்கும் பூமியில் தொடர்பு கட்டுப்பாடு இல்லை. இவைகள் தான் தோன்றித்தனமாக தன் இஷ்டத்திற்கு சுற்றிக் கொண்டு இருப்பவைகள். இவைகள் அவ்வபோது மோதி கொள்ளும் வாய்ப்பும் உள்ளது அப்படி மோதி கொண்டால் chain reaction போல அடுத்தடுத்து உள்ளதை மோதி கொண்டே போகும்.

"Gravity " படத்தில் அப்படி ஒரு செயற்கை கோள் வந்து விண்வெளி வீரர்கள் ஷிப் இல் மோதுவதை போல காட்டி இருப்பதை பார்த்து இருக்கலாம்.
தற்போதைய கணக்குப்படி 1100 இயங்கும் செயற்கை கோள்களும் 2600 இயங்காத இறந்துபோன செயற்கை கோள்களும் பூமியை சுற்றி வருகின்றன.



ரஷ்யா அனுப்பிய ஸ்புட்னிக் 1 இருப்பதிலேயே மிகப் பழமையான செயற்கைக்கோள் கூட அங்கே இன்னும் சுற்றி கொண்டிருக்கிறது.


சரி இதனால் ஆபத்து ஏதும் இல்லையா ?
கால போக்கில் இவைகள் சுற்றும் வேகம் குறையும் என்கிறார்கள் அப்போது இவைகள் ஒவொன்றாக பூமியை நோக்கி இழுக்க படும் என்கிறார்கள்.

ஒரு வேலை நாளையே அனைத்தும் ஒரே நேரத்தில் இழுக்க பட்டால்.. பூமியில் நெருப்பு மழை போல அவைகள் பொழிவதை பார்க்கலாம்.
ஆனால் அவைகள் தங்கள் வேகத்தை இழந்து சுற்று பாதை குறைந்து பூமியை நோக்கி உயரம் குறைய சில நூற்றாண்டு காலம் பிடிக்கும் என்பதால் அதை பற்றி இப்போது கவலை இல்லை என்கிறார்கள்.

சில நூற்றாண்டுகள் கழித்து அதற்க்கான மாற்று திட்டம் சாவகாசமாக உருவாக்கி கொள்ளலாம் என்கினறனர் விஞ்ஞானிகள்

Thursday, 25 July 2019

தேசிய கல்வி கொள்கை 2019



தேசிய கல்விக்கொள்கையின் தமிழாக்கம் இந்த இணைப்பில் உள்ளது படித்து தங்களின் மேலான கருத்தை தெரிவியுங்கள் 
தேசிய கல்வி கொள்கை 2019
மத்தியில் ஆளும் தேசிய மக்கள் கூட்டணி பல சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போதுள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் கல்வி முறையிலும், கற்பித்தல் முறையிலும், பட திட்டத்திலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளது.
தற்போதுள்ள கல்வி முறையானது 1986 ஆம் ஆண்டினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்க பட்டது.அதன் பின் 1992 ஆம் ஆண்டு இதில் சில மாற்றங்களை மட்டுமே செய்திருந்தனர். 2014 இல் மோடி தலைமையிலான அரசு புதிய கல்வி முறையினை கொண்டு வர திட்டமிட்டிருந்தது. இதற்காக கஸ்துரி ரங்கன் தலைமையில் குழு ஒன்று அமைக்க பட்டு அதற்கான ஆய்வினை செய்தது. மீண்டும் பதவி ஏற்றுள்ள அரசு இந்த ஆய்வறிக்கையினை ஆலோசித்து தேவையான மாற்றங்களை செய்திய முறையினை அறிமுக படுத்த திட்டமிட்டுள்ளது.
புதிதாக பதவி ஏற்றுள்ள மனித வள மேம்பட்டு அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க் இடம் புதிய கல்வி கொள்கை வரைவு சமர்ப்பிக்க பட்டுள்ளது. 484 பக்கங்களை கொண்ட அந்த வரைவில் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் பாடத்திட்டம், ஆசிரியர்களின் தகுதி தேர்வு என அனைத்து கோணங்களிலும் அலச பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கை வரைவின் முக்கிய அம்சங்கள்
  • 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு என்ற முறையினை மாற்றி செமஸ்டர் முறையினை அறிமுக படுத்த பரிந்துரைத்துள்ளது. மேலும் தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர ஆலோசனை கொடுக்க பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு சுமை  குறைவதோடு மன அழுத்தத்தினையும் குறைக்கும்.
  • 3,5,8 ஆம் வகுப்புகள் முறையே பொது திறனறி தேர்வுகள் நடத்த பரிந்துரைக்க பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சிந்தனை திறன், பொது அறிவு மேம்படும்.
  • உயர் படிப்பிற்கு உதவும் பொருட்டு தேசிய தேர்வு ஆணையம் மாணவர்களின் விடைத்தாள் , மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளுக்கு வழங்குதல் என ஆலோசனைகள் வழங்க பட்டுள்ளன.
  • மொழி அறிவினை மேன்மை படுத்தும் பொருட்டு மூன்று மொழி வரைவினை கொடுத்துள்ளது. பெரும்பாலான தென் மாநிலங்கள் எதிர்த்து வரும் நிலையில் இம்முடிவினை கை விட உள்ளது.
  • புதிய கல்வி அமைப்பானது தொலைநோக்கு பார்வையுடையதாகவும், மாணவர்களின் சிந்திக்கும் திறன், திட்டமிடல் இவற்றை உள்ளடக்கியதாகவும், பாடத்திட்டத்திலும், கற்பித்தல் முறையிலும் வரைவினை சமர்ப்பித்துள்ளது.
  • தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வினை முறை படுத்த பரிந்துரைக்க பட்டுள்ளது. பள்ளி மேம்பட்டு நிதி, உள்கட்டமைப்பு நிதி என எந்த ஒரு நிதியினையும் வசூலிக்க தடை செய்ய வலியுறுத்தி உள்ளது. மாநிலங்களில் பள்ளி ஒழுங்கு முறை ஆணையம் அமைத்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டண உயர்வினை அமுல் படுத்தும்.
  • புதிய கல்வி முறையில் ஆரியப்பட்டா, சாணக்கிய போன்றோரினை குறித்த தகவல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. நீர்மேலாண்மை மற்றும் யோகா போன்றவை பாடத்திட்டத்தில் பரிந்துரைக்க பட்டுள்ளது.
  • ஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது என பலவற்றில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்துள்ளது.
  • கிராமப்புறங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய முறையான தாங்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது.
  • அடிக்கடி இடமாற்றுதல் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள உறவினை பாதிப்பதோடு கல்வியையும் பாதிக்கும் என பரிந்துரைக்க பட்டுள்ளது.
  • இன்டெர்க்ராட்ட் பி.எட் எனும் நான்காண்டு அடிப்படை தகுதியாக மாற்ற திட்டமிட்டுள்ளது. கற்றல் அல்லது பிற பணிகளுக்கு குறிப்பாக தேர்தல் பணிகளுக்கு உட்படுத்த கூடாது என பரிந்துரைக்க பட்டுள்ளது.
  • தரமில்லாத தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை விரைவில் மூட திட்டமிட்டுள்ளது.

Wednesday, 23 January 2019

நேதாஜியும் தமிழர்களும்..!

வீரத்தமிழன்..!

இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும் என்பது என் திண்ணம்....
அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள்.

தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறியநாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றேபோதுமானது...

இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டது.

"இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார்.

அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.

அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாஜியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை  கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாஜி ஜெனரல் திலானை அழைத்து கூறினார் -- " இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள். இவர்கள் தாவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து" என்றாராம்.

பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். " தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்த்மாவும் தமிழர்கள்தான்"

இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் ஜெனரல் கியானி கூறுகிறார். " தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்டபோதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

நேதாஜியின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார் "மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூலையில் கட்டியாக உள்ளது" என்றார்.

அதற்க்கு பதில் அளித்த நேதாஜி " இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் " என்று கூறினார்.


1945  இல் மார்ச் மாதம் நேதாஜி படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள்  தூக்கிலிடபட்டனர். இந்தியா விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. ஒரு தமிழனாக பிறந்ததால்தான் ராமுத்தேவர், இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை.

தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாஜி 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16  பேர்கள் தமிழர்கள்.ஒரு ஈழத்தமிழர் உட்பட. இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில்2500 ௦பேர்  அணிதிரண்டனர். உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14  வயது சிறார்களும் 16  வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர்.ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாகஇ.தே. ரா.க்கு நேதாஜியிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாஜி பெற்று கொண்டார்.

நேதாஜியை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாஜி சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர்.

ஜெர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில்   உள்ள  பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி.  நேதாஜியின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு ஜெர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார். குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம்.

மலேயாவிலும் நேதாஜிக்கு அதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துஸ்தான் போன்ற தாமில் இதழ்கள் வெளிவந்தன.

ராணி ஜான்சி படையின் தலைவியாக  கேப்டன் இலட்சுமி இருந்தார். இந்த படையில் கேப்டன் ஜானகி தேவர் பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தியாவில் பிறக்காதவர், இந்தியாவை பார்க்காதவர். எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள். விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தாங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர். அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரியமறுத்து தூப்பாக்கி ஏந்தி  ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள்.
அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


அடுத்த பிறவியில் நான் தமிழனாக  பிறக்க வேண்டும் ---- நேதாஜி.

#வாழ்க அவரது புகழ்..!

கௌதம் இளங்கோ