Friday, 13 September 2013

என் பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்... 

நிர்வாணமும் நெருடல் அளிக்காத நாட்கள், 
தவழும் தேசம் தாண்டிய அந்த பருவம் வெள்ளையாய் வெளி வந்த வார்த்தைகள்,
வாயினிலே வாழ்ந்த என் கைவிரல்கள்,
என் மழலை பருவத்தில் மைல்கல்... என் பள்ளிக்கூடம்.... 

முட்டி தாண்டாத கால்சட்டை,
எண்ணெய் தோய்த்த என் சிரம்
முதிகில் மிதந்த புத்தக பை அதில் சங்கீதம் வாசித்தபடி விளையாடிய என் குச்சி டப்பா... 


மழலை சுதந்திரம் மறிக்க பட்ட நாள்... என் பள்ளி முதல் நாள்... 

பழகி போன என் பள்ளியில் பகிர தொடங்கினேன் வார்த்தைகளை.. விஷம் என்று நினைத்த அந்த அமிர்தத்தின் சுவை உணர்ந்தேன்.. ருசித்தேன்... 
10 வயதில் தொடக்கம் முடிவுற்றது...
பள்ளி மாறி பக்குவம் அடைந்தேன்... பென்சில்கு விடைகொடுத்து பேனாவை கரம் பிடித்தேன்... வார்த்தைகளோடு உணவும் உணர்வும் பரிமாறிக்கொள்ள தொடங்கினேன்..


கை தட்டிய கலை நிகழ்சிகள்,
 பரிசு வாங்கிய புத்தகம்,
 மண்டியிட்ட்ட வகுப்பறை வாசல்,
 கிறுக்கப்பட்ட கரும்பலகை,
 மதி மயங்கும் அந்த குச்சி ஐஸ்,
 புறக்கணிக்கும் வகுப்புகள்,
 புரியாத புதிராய் வினாத்தாள்,
 கரை படியா விடைத்தாள்,
 உயிரோட்டமான நண்பர்கள்,
 செத்தாலும் மறவாத ஆசிரியர்கள்... 
இப்புடி என் வாழ்வில் இருந்த பிரிக்க முடியாத அந்த பள்ளி பருவத்தில் இருந்து நினைவுகள் என்ற ஒன்றை மட்டும் எடுத்து கொண்டு கண்ணீருடன் கரை ஏறுகிறேன்..


கெளதம் இளங்கோ